22 Apr 2024

களுதாவளையில் நடைபெற்ற கலாசார விளையாட்டு விழா.

SHARE

களுதாவளையில் நடைபெற்ற கலாசார விளையாட்டு விழா.

களுதாவளையில் சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு கலாசார விளையாட்டு விழா கெனடி விளையாட்டு கழகத்தின் தலைவர் த.சர்ஜின் தலைமையில் களுதாவளை பொது விளைாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை(21.04.2024)  மாலை  இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.
கெனடி விளையாட்டுக் கழகத்தின் 66வது ஆண்டினை நினைவு கூரும் முகமாக   கலாசார விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன் போது தேங்காய் உடைத்தல், கம்பு சுற்றுதல், கையிறு இழுத்தல், கிடுகு பின்னுதல், முட்டி உடைத்தது, தலையனை சமர் என பாரம்பரிய போட்டிகள் இடம் பெற்றன.

கெனடி விளையாட்டுக் கழகத்தினால் இப்பிரதேசத்தில் இருந்து தேசிய மற்றும் சர்வதே தரத்திலான வீரர்களை உருவாக்கி வருகின்றமை சிறப்பம்சமாகும்.

விளையாட்டுத்துறையில் அதிதித திறமைகளை சர்வதே மட்டத்தில் வெளிக்காட்டிய கழக வீரர்களுக்கு நினைவுச்சின்னம்  அதிதிகளினால் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரெத்தினம், காணி சீர்திருத்த ஆணைக்குழு பணிப்பாளர் என.விமல்ராஜ், களுதாவளை பிரதேச சபை செயலாளர் எஸ்.அறிவழகன், களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் கோயில் பரிபாலசபை தலைவர் கே.பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இப்போட்டிகளில் பங்கு பற்றி வெற்றியிட்டியவர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.






 

SHARE

Author: verified_user

0 Comments: