17 Apr 2024

வடகிழக்கில் 50 வீத்திற்கு மேல் வாக்குகளைப் பெறக்கூடிய ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டும்.

SHARE

வடகிழக்கில் 50 வீத்திற்கு மேல் வாக்குகளைப் பெறக்கூடிய ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டும்.

வடக்கு கிழக்கிலும், வடகிழக்கிற்கு வெளியிலும், தமிழ் பேசுகின்ற மக்களின் விருபுக்களைப் பெறுகின்ற ஆளுமையுள்ள, வடக்கு கிழக்கில் 50 வீத்திற்கு மேல் வாக்குகளைப் பெறக்கூடிய ஒருவரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டும்.

தமிழர் ஒருவரை பொதுவேட்பாளரை நிறுத்தக்கூடாது என்று கூறுகின்றவர்கள், ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்கள் ஊடாக என்ன தீர்வைத் தருவார்கள்? அவ்வாறு தரக்கூடியவர்கள் யார்? என்பதை தெரிவிக்க வேண்டும்.

என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். செவ்வாய்கிழமை(16.04.2024) மாலை மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் உள்ள அவர இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…..

எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்த்தலில் தமிழ் மக்கள் சரியாகவும் நிதானமாகவும் முடிவெடுக்க வேண்டும் என்பது எதிர்பார்க்கப்படுகின்றது. சிவில் சமூகமும், புத்திஜீவிகளும், இத்தேர்தலை எவ்வாறு கையாளப்படல் வேண்டும் என்பது தொடர்பில் சிந்திக்கின்றார்கள். இந்நிலையில் தமிழ் தேசிகள் கட்சிகள் இத்தேர்தலை எவ்வாறு கையாளப்படல் வேண்டும் என்பதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்துள்ளன. ஜனாதிபதித்துவ ஆட்சிமுறை கொண்டுவரப்பட்டு 46 ஆண்டுகள் கடந்திருக்கின்றன, யுத்தம் முடிவடைந்த 15 ஆண்டுகள் கடக்கும் நிலமை காணப்படுகின்றது. இந்நிலையில் தமிழர்களின் இனப்பிரச்சனை சுந்தரத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்து வருகின்றது. இதனைத் தீர்ப்பதற்காக அகிம்சை ரீதியாக தழிர் தேசியக் கட்சிகள் பல முயற்சிகளைச் செய்து வந்திருக்கின்றன. அதற்கு எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை. 30 வருடகாலமாக ஆயுதரீதியாகப் போராடினார்கள், பலநாடுகளின் யுக்திகளின் மூலமாக அந்த போராட்டமும் மௌனிக்கப்பட்டுள்ளது. அதன்மூலமும் தமிழர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை. இராஜதந்திர ரீதியாக பேச்சுவார்த்ததை மூலமாக இப்பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்றால் அதுவும் நிறைவேற்றப்படவில்லை.

1978 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜனாதிபதித்துவ ஆட்சிமுறை கொண்டுவரப்பட்டது. தேசியஇனப்பிரச்சனைக்குரிய தீர்வை ஜே.ஆர்.ஜெயவர்த்தன யுத்தம் என்ற ரீதியில்தான் சிந்தித்தார். பின்னர் இந்தியாவில் நிர்ப்பற்த்தின் மூலம் 13 வது திருத்தத்தின் மூலம் 1987 ஆம் ஆண்டு மாகாணசபை முறை கொண்டுவரப்பட்டது. அந்த மாகாணசபையிலும்கூட இலங்கை இனப்பிரச்சனைக்கு முழுமையான தீர்வு இல்லை.

மாகாணசபை தேர்தல் நிறுத்தப்பட்டு 6 வருடங்களாகின்றன, மைலத்தமடு மேச்சல்தலைப் பிரச்சனையைக்கூட மாகாணசபை முறையால் தீர்க்கப்படாமலுள்ளன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முழுமையாக்கப்படல் வேண்டும் என்பதற்காக அப்பகுதி மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இதற்குக்கூட 13வது திருத்ததின்மூலம் கிடைத்த அதிகாரத்தைக் கொண்டு தீர்க்க முடியவில்லை. 1987 ஆம் ஆண்டிலிருந்து கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமை எமக்குத் தீர்வாக அமையவில்லை.

இந்நிலையில் 1994 நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அவர் நியாயமான தீர்வைத்தருவார் என் நம்பி சந்திரிக்காவை ஆதரித்தோம், பின்னர் 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவிற்கும் வாக்களித்தோம், எக்குரிய தீர்வு கிடைக்கும் என எம்மை நம்பவைத்தார்கள். இவ்வாறு இரு ஜனாதிபதித் தேர்லிலும் நம்பி வாக்களித்தும் எமக்கு எதுவும் கிடைக்கவில்லை.

தற்போதைய நிலையில 3 ஜனாதிபதி வேட்பாளர்கள் முகம் காட்டுகின்றார்கள். நான் 13 வதுதிருத்தத்தையோ, சமஸ்ட்டியைத் தருவேன் என்றோ கூறமாட்டேன் என அனுரகுமார திசாநாயக்க தெரிவிக்கின்றார். 13 வதுதிருத்தச் சட்டத்தை தரலாம் என சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார் ஆனாலும் சிங்கள பேரினவாதம் குறுக்கிடுகின்றபோது பொலிஸ் அதிகாரத்தை அவரும் தரக்கூடிய வாய்ப்பு இல்லை. தற்போதைய ஜனாபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மைலத்தமடு, பிரச்சனை, கல்முனை பிரதேச செயலக பிரச்சனை, உள்ளிட்ட மிகவும் சாதாரண பிரச்சனையைத் தீர்க்க அவர் இன்னும் முன்வரவில்லை. 13வது திருத்தத்தை தரலாம் பொலிஸ் அதிகாரம் தரமுடியாது என தெரிவிக்கின்றார். எனவே நாம் கடந்த காலத்திலும் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம், நிகழ்காலத்திலும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். எதிர்காலத்திலும் எந்தவொரு வேட்பாளரும் நம்பிக்கையூட்டக்கூடிய கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை.

ஜனாதிபதி வேட்பாளர்களை தமிழ் தேசியக் கட்சிகள் சந்தித்து உங்களிடம் என்ன தீர்வு உள்ளது என்பதைக் கேட்கவேண்டும். அதனை மக்களிடதில் தெரிவிக்கவேண்டும். இந்நிலையில் பேரினவாதத்திலுள்ளவர்கள் எமக்கான தீர்வைத் தருவதற்கு மிகவும் பின்னடித்துக் கொண்டு வருகின்றார்கள்.

யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கு மக்களின் மக்கள் ஆணையைப் பெறவேண்டும். அதற்கான தேர்தல் விஞ்ஞாபனங்களைத் தெரிவித்துக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஒருவர் பொதுவேட்பாளராக களமிறங்கினால் என்ன என்ற கேள்ளி கேட்க்கப்படுகின்றது. இது தொடர்பில் வடக்கு கிழக்கிலுள்ள பலரும் ஆர்வம் காட்டிவருகின்றார்கள். எனவே ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஒருவரை பொது வேட்பாளராக போட்டியிடச் செய்து அதன்மூலம் வடக்கு கிழக்கு மக்களின் மக்கள் ஆணையை சர்வதேசத்திடம் தமிழ பேசும் மக்கள் உரத்த குரலில் கூறுவதற்குரிய சந்தர்ப்பமாக பயன்படுத்தினால் என்ன என்ற கேள்வி எழுகின்றது.

எமது வேட்பாளர் வடக்கு கிழக்கிலும், வடகிழக்கிற்கு வெளியிலும், தமிழ் பேசுகின்ற மக்களின் விருபுக்களைப் பெறுகின்ற ஆளுமையுள்ளவதராக இருக்க வேண்டும். எனவே வடக்கு கிழக்கில் 50 வீத்திற்கு மேல் வாக்குகளைப் பெறக்கூடிய ஆளுமையுள்ள ஒருவரைகளமிறக்க வேண்டும்.

தமிழர் ஒருவரை பொதுவேட்பாளரை நிறுத்தக்கூடாது என்று கூறுகின்றவர்கள், ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்கள் ஊடாக என்ன தீர்வைத் தருவார்கள்? அவ்வாறு தரக்கூடியவர்கள் யார்? என்பதை தெரிவிக்க வேண்டும்.

எனத் தெரிவித்த அவர் மகாணசபை, உள்ளுராட்சிமன்றம் போன்ற தேர்தல்கள் இன்னும் நடாத்தப்படவில்லை. எனவே மக்கள் தங்களது பிரதிநிதிகளைக்கூட தெரிவு செய்ய முடியாத ஜனநாயக முறை இங்கு காணப்படுகின்றது. தேர்தல் தொடர்பில் சுயவிருப்பு வெறுப்புக்களைப் பார்த்துக் கொண்டிருக்கினார்கள்.

நாடு வங்குறோத்து நிலையில்; உள்ள இக்காலகட்டத்தில் உலக நாடுகளிலிருந்து கடன்பெற்று ஆங்காங்கே சில அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன. இச்சந்தர்ப்பத்திலும் லஞ்சம், மோசடி, என்பன இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. எனவே கடன்பெற்று வந்த பணத்திலும் கையூட்டுப் பெறுகின்ற நிலமைதான் காணப்படுகின்றது. உதாரணமாக ஒரு முட்டையிலிருந்து சுமார் 15 ரூபா கொள்ளையடிக்கப்படுகின்றது.

கச்சதீவை இந்தியா மீள பெறவேண்டும் என எழுந்துள்ள சர்சையானது இலங்கையின் இறைமைக்கு ஓர் சவால் விடுகின்ற விடையமாகவும், மீனர்களுக்கும் அச்சுறுத்தல் விடுகின்றதாகவும் அமைந்துள்ளது. இது இந்திய தேர்தலுக்காக கொள்ளப்படுகின்ற உத்தியாகவே பார்க்கப்படுகின்றது. அந்நாட்டில் தேர்தல் முடிவுறதும் இவ்வடையம் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தாது என அவர் இதன்போது தெரிவித்தார்.






SHARE

Author: verified_user

0 Comments: