தந்தை செல்வா அவர்களின் 47 ஆவது நினைவு தினம் அனுஸ்ட்டிப்பு.
இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் தந்தை செல்வா அவர்களின் 47 ஆவது நினைவு தின நிகழ்வு மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வாவின் நினைவு பூங்காவில் வெள்ளிக்கிழமை(26.04.2024) இடம்பெற்றது.
இதன்போது அன்னாரது சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதன் பின் நினைவுரைகளும் இங்கு இடம் பெற்றன.
இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் பிரதிநிதிகள், வாலிபர் முன்னணியினர், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், கட்சியின் ஆதரவர்கள், என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment