16 Feb 2024

ரன்விமன வீடு கையளிப்பு.

SHARE

ரன்விமன வீடு கையளிப்பு.

மட்டக்களபப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் குருமண்வெளி -11, மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் ரன்விமன வீடு பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களினால் வியாழக்கிழமை(2024.02.15) பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.

குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை சமூக ரீதியாக மேலுயர்த்துவது மற்றும் வீடற்றவர்களுக்கு வீடு வழங்குவது நோக்கமாகக் கொண்டு கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ரன்விமன வீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் திருமதி.கருணாகரமூர்த்தி ராதிகா அவர்களுக்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் ரூபா 750,000 வழங்கப்பட்டிருந்ததோடு, பயனாளியின் பங்களிப்பாக ரூபா 1700,000 வுமாக மொத்தம் 2450,000 செலவில் இவ்வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி.சத்தியகௌரி தரணிதரன், சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் களுவாஞ்சிகுடி தலைமையக முகாமையாளர் திருமதி.புவனேஸ்வரி ஜீவகுமார், கருத்திட்ட முகாமையாளர் திருமதி.விமலராணி யோகேந்திரன், வங்கி முகாமையாளர்கள்சமூக அபிவிருத்தி உதவியாளர்கள், கிராமசேவை உத்தியோகஸ்த்தர், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.










 

SHARE

Author: verified_user

0 Comments: