தமிழரசுக் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் - ஜனா எம்.பி.
தாங்கள் தமிழ் மக்களுக்காக நீண்டகாலமாக பயணிக்கும் கட்சி தாங்கள்தான் தாய்க் கட்சி என்று சொல்லும் தமிழரசுக் கட்சியினர், உங்களுக்குள் ஒற்றுமையைக் கொண்டு வந்து தமிழ் தேசியக் கூட்டடைமைப் பலப்படுத்த வேண்டும். என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்கான அபிவிருத்திக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை(01.02.24) களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு விட்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…
தமிழ் மக்களுக்காக அரசியல் செய்யும் கட்சிகள், ஒன்றாக பயணிக்க வேண்டிய காலநிலை இதுவாகும். 2009 இற்கு முன்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலமான ஒரு அரசியல் இருந்தது. அந்த நேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள்கூட இயங்கு நிலையிலிருந்தார்கள். நாங்கள் ஆயுதரீதியாகவும். அரசியல் ரீதியாகவும் பலமாக இருந்தோம். 2009 இற்குப் பின்பு ஆயுத ரீதியாக நாங்கள் செயற்பட முடியாத நிலை இருந்து கொண்டிருக்கும் இந்நிலையில் மிகவும் பலமாக இருக்க வேண்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இக்காலகட்டத்தில் சிதைந்து பல்வேறு குழுக்களாக இயங்கிக் கொண்டிருக்கின்றது.
2009 இங்குப் பின்பு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கூட சிதைவடைவதற்குக் காரணமும்கூட அக்கூட்டமைப்பை பதிவு செய்யாததுதான்.
இந்நிலையில் தமிழரசுக் கட்சிக்குள்ளேயே ஒரு குழப்ப நிலை உருவாகியிருப்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். அக்கட்சியின் தலைவர்கூட வரலாற்றிலே வாக்களிப்பின் மூலம் தெரிவாகியிருக்கின்றார். அவர்களின் கடந்த 28 ஆம் திகதி நடைபெறவிருந்தது அது நடைபெறவில்லை. செயலாளர் மற்றும் ஏனைய நிருவாகங்களுக்கான தெரிவுகள்கூட நடைபெற்றிருக்கின்றது ஆனால் அது ஒழுங்காக நடைபெறவில்லை என ஒருசாரார் சொல்கின்றார்கள். இந்த நிலையில் ஒன்றை தமிழரசுக் கட்சி உணரவேண்டும். தாங்கள் தமிழ் மக்களுக்காக நீண்டகாலமாக பயணிக்கும் கட்சி தாங்கள்தான் தாய்க் கட்சி என்று சொல்பவர்கள், உங்களுக்குள் ஒற்றுமையைக் கொண்டு வந்து தமிழ் தேசியக் கூட்டடைமைப் பலப்படுத்த வேண்டும். அக்கட்சிக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள் பா.உ சிறிதரன் அவர்கள்கூட 2009 இற்கு முன்பு இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார்.
தற்போது நாங்;கள் ஐந்து கட்சிகள் சேர்ந்து தமிழ் தேசியக் கூட்டணியாக பதிவு செய்யப்பட்டு ஒரு அமைப்பின் கீழ் யாப்பு நிருவாகத்தின் கீழ் இருக்கின்றோம் எனவே தமிழரசுக் கட்சியும் அக்கூட்டமைப்புக்குள் வந்து இணைந்து அனைவரும் ஒருமித்து பயணிப்போமாக இருந்தால் அகில இலங்கை தமிழ் காங்கிரசும், பா.உ விக்னேஸ்வரன் போன்றோரும் எம்முடன் இணைவார்களாக இருந்தால் தமிழ் மக்களின் பலம் சர்வதேசத்திற்கு உணர்த்தப்படும்.
2004 ஆண்டு தமிழ் தேசியக் சுட்டமைப்பு பலமாக இருக்கும்போது 22 பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழ் மக்கள் கொடுத்திருந்தார்கள். சர்வதேசம் அதனை மதித்தது மீண்டும் அதே நிலமைக்குச் செல்வோமாக இருந்தால் ஒற்றுமையா பயணித்து 20 பாராளுமன்ற உறுப்பிளர்களைப் பெறுவோமாக இருந்தால் சர்வதேசம் எங்களைத் திரும்பிப் பார்க்கும். இந்த நாடும்கூட தமிழ் மக்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வைத் தருவதற்கு முன்வருவார்கள். எனவே இலங்கைத் தமிழரசுக் கட்சி தங்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பாக பயணிப்பதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment