நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியத்தினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.
“கல்வியே எமது சமூகத்தின் காப்பரண்” எனும் தெணிப்பொருளுக்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்திலிந்து இயங்கிவரும் நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியத்தினால் பல்வேறு உதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சங்கர்புரம் கிராமத்தில் பொருளாதார ரீதியில் நலிவு நிலையில் கல்வி கற்று வரும் தெரிவு செய்யப்பட்ட 119 மாணவர்களுக்கு கரிகாலன் அமைப்பின் நிதி அனுசரணையில் நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியத்தியத்தினால் புதன்கிழமை (07.02.2024) கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment