24 Feb 2024

லயன்ஸ் கழகத்தினால் விசேட தேவையுடையோர் இல்லத்திற்கு உலர் உணவுப் பொருட்கள் வழக்கி வைப்பு.

SHARE

லயன்ஸ் கழகத்தினால் விசேட தேவையுடையோர் இல்லத்திற்கு உலர் உணவுப் பொருட்கள் வழக்கி வைப்பு.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி லயன்ஸ் கழகத்தினால் களுவாஞ்சிகுடியிலுள்ள சிர்மினா விசேட தேவையுடையோர் இல்லத்திற்கு ஒருதொகுதி உலர் உணவுப் பொருட்கள் இன்றயதினம் (சனிக்கிழமை 24.02.2024) வழங்கி வைக்கப்பட்டன.

களுவாஞ்சிகுடி லயன்ஸ் கழகம் அப்குதியில் பல்வேறுபட்ட மனிதாபிமான மற்றும் சமூக சேவைகளையும் மேற்கொண்டு வரும் இந்நிலையில் இன்றயதினம் இவ்வுதவித்திட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது லயன்ஸ் கழகத்தின் முன்னாள் மாட்ட ஆளுனர் லயன் றொசான் காஞ்சன யாப்பா, மகரகம லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன் சிறிஜெயசூரிய, களுவாஞ்சிகுடி வலயத் தலைவர் லயன் .பா.சந்தசேனா மற்றும் லயன்ஸ் கழக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது சிர்மினா விசேட தேவையுடையோர் வளாகத்தினுள் பயன் தரும் பழ மரக்கன்றுகளையும் லயன் கழக உறுப்பினர்கள் நட்டு வைத்தனர்

















SHARE

Author: verified_user

0 Comments: