மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் ஏற்பட்டிருந்த நீர்க்கசிவு.
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட குருக்கள்மடம் பிரதேசத்தில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிரதான நீர்க்குழாயில் நீண்ட காலமாகவிருத்து நீர்க்கசிவு ஏற்பட்டிருந்தது.
இவ்விடையம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து அங்கு விஜயம் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உத்தியோகஸ்த்தர்கள், நீர்க் கசிவைக் கட்டுப்படுத்தி சீர்செய்வதற்குரிய பணியை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் நீண்ட நாட்களாக அப்பகுதியில் நீர்கசிவு ஏற்பட்டமை தொடர்பில் தமது கோரிக்கைக்கு ஏற்ப இஸ்த்தலத்திற்கு விரைந்து நீர்க் கசிவைக் கட்டுப்படுத்துவதற்கு உடன் நடவடிக்கை எடுத்து நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினருக்கு அப்பகுதி மக்கள் தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment