வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு.
மட்டக்களப்பில் அண்மையில் பெய்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மட்டக்களப்பு நலிவுற்றோர் அபிவிருத்தி சங்கத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு தனியார் கல்வி நிலையமொன்றில் ஞாயிற்றுக்கிழமை (21.01.2024) இடம்பெற்றது.
மட்டக்களப்பு வட்ஸ் அமைப்பின் ஒழுங்கமைப்பில், அவ்அமைப்பின் தலைவர் என்.ஆர்.டேவிட் தலைமையில் இந்நிவாரணப் பணிஇடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்காம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பாவற்கொடிச்சேனை, சத்துருகொண்டான் மற்றும் பல பிரதேசங்களைச் சேர்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செய்யப்பட்ட 62 குடும்பங்களுக்கு தலா சுமார் 7000 ரூபா பெறுமதியான இந்த நிவாரணப் பொதிகள், வட்ஸ் லண்டன் அமைப்பின் நிதியுதவியில் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் வட்ஸ் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எஸ்.சசிதரன் முன்னாள் தலைவர் கே.சத்தியநாதன், வஸ்ட் லண்டன் பிரதிநிதி விறிட்டோ ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment