22 Jan 2024

இலங்கையில் கொண்டுவரப்படவுள்ள அதி பயங்கரமான சட்டங்களின் ஆபத்துக்களை எதிர்த்து ஆர்ப்பாட்டப் பேரணியும் உண்ணாவிரதமும்.

SHARE

இலங்கையில் கொண்டுவரப்படவுள்ள அதி பயங்கரமான சட்டங்களின் ஆபத்துக்களை எதிர்த்து ஆர்ப்பாட்டப் பேரணியும் உண்ணாவிரதமும்.

முன்மொழியப்பட்டுள்ள நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமூலம்முன்வரைவு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள நிலையில் அதிலுள்ள அதிபயங்கரமான ஆபத்துக்களை எதிர்த்து மட்டக்களப்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

திங்களன்று 22.01.2024 மட்டக்களப்பு நகரில் சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் சிவில் சமூகப் பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் அரசியல் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் உட்பட சுமார் 500 இற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற ஆர்ரப்பாட்டப் பேரணியிலும் உண்ணாவிரத அமர்விலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்றப் பிரதி அலிஸாஹிர் மௌலானாவும் கலந்து கொண்டார்.

கல்லடிப்பாலத்திலிருந்து ஆரம்பித்த பேரணி மட்டக்களப்பு நகர காந்திப் புஞ்கா சதுக்கத்தில் முடிவடைந்தது. நிகழ்வின் இறுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானாவிடம் கிழக்கு மாகாண சிவில் சமூகத்தின் பிரகடனம் கையளிக்கப்பட்டது. பிரகடனத்தைப் பெற்றுக் கொண்டு அங்கு கருத்துத் தெரிவித்த அலிஸாஹிர் மௌலானா, நாடாளுமன்ற விவாதத்திற்குச் சமர்ப்பிக்கப்படவுள்ள இந்த நிகழ்நிலை காப்புச் சட்டத்தைத் தாம் கடுமையாக எதிர்க்கப்போவதாக உறுதியளித்தார்.

சிவில் சமூகத்தினரால் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானாவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரகடனத்தில்

எம்மால் வாக்களிக்கப்பட்டு மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றில் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு பிரதிநிதியும் வாக்களித்த மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாட்டில் உள்ளார்கள்.

எனவே, எங்களது அடிப்படை உரிமைகளையும், சுதந்திரங்களையும் பாதுகாப்பதற்கும் அவற்றை முற்றுமுழுதாக நாங்கள் அனுபவிப்பதற்குமான சூழலை உறுதி செய்யவது மக்களால் உருவாக்கப்பட்ட அரசினுடைய தார்மீகக் கடப்பாடு என்பதைக் கருத்தில் கொண்டு கிழக்கு மாகாண சிவில் சமூகம் என்ற அடிப்படையில் பின்வரும் பரிந்துரைகளை முன்மொழிகின்றோம்.

1)இலங்கை நாட்டின் அமுலில் இருக்கினற பயங்கரவாத தடுப்புச் சட்டமானது எந்த ஒரு நியாயப்படுத்தலுமின்றி மீள பெறப்படல் வேண்டும் இதன் வாயிலாக ஒவ்வொரு இலங்கை குடிமகனினதும் அடிப்படை உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் .

2)அரசினால் தற்போது முன்மொழியப்பட்டு சட்ட மூலமாக்குவதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்ற சட்ட வரைபுகளான பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் நிகழ்நிலை காப்புச்சட்டம் மற்றும் ஒலிபரப்பு ஆணைக்குழுச்சட்டம் என்பன உடனடியாக மீளப்பெறப்படல் வேண்டும் .

3)இலங்கை அரசானது ஜனநாயக தளங்களையும் ஊடக சுதந்திரத்தையும் எந்த ஒரு மட்டுப்பாடுகளிமின்றி பாதுகாப்பதற்கான நிலையை உறுதி செய்தல் வேண்டும் .

4)அரசாங்கம் ஒவ்வொரு குடிமகனினதும் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் குறிப்பாக கருத்துச் சுதந்திரம் ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் தகவல்களை அணுகுவதற்கான சுதந்திரம் என்பவற்றை மட்டுப்படுத்தலின்றி இதலையீடின்றி அனுபவிப்பதற்கான நிலையை உறுதி செய்தல் வேண்டும்.

5)இலங்கை நாட்டுக்குள் ஒவ்வொரு மனித உரிமை பாதுகாவலர்கள் ஊடகவியலாளர்கள் மனித உரிமை சட்டத்தரணிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் என்பன சட்டத்திற்குட்பட்டவாறு செயற்படும்போது அச்சுறுத்தப்படுவது சட்டத்திற்கு முரணாண வகையில் கைது செய்யப்படுவது அல்லது அவர்களின் செயற்பாடுகள் முடக்கப்படுவது என்பன உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

6)பொருளாதார ரீதியாக நலிவுற்று வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஒவ்வொரு இலங்கை குடிமகனினதும் வாழ்வியல் மற்றும் பொருளாதார உரிமைகளைப் பாதுகாக்கும் முகமாக முந்தைய ஆட்சியாளர்களால் சூறையாடப்பட்ட நிதி மற்றும் வளங்களை மீளப்பெறுவதற்கான பொறிமுறை உருவாக்கப்பட்டு அதனுடாக அவைகள் பெறப்பட்டு அவை மக்களினுடைய பொருளாதார கல்வி மற்றும் சுகாதார நலன்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும்.

7)போர் மற்றும் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பாதிக்கப்ட்ட பொறுப்புக்கூறலை அரசு உறுதி செய்வதோடு பாதிக்கப்பட்ட மக்களுடைய நல்வாழ்விற்கான பரிகாரத்தை உறுதி செய்வதன் வாயிலாக இந் நாட்டின் நிலையானதொரு இன மத நல்லிணக்கத்தை உறுதி செய்ய வேண்டும்.” உஎன்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் என்றால் என்ன?

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் 2023 செப்டெம்பர் 18ஆம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு 2023 ஒக்டோபர் 3ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இச்சட்ட மூலமானது குறிப்பிட்ட நோக்கங்களுடன்நிகழ்நிலை பாதுகாப்பு ஆணைக்குழுஒன்றை நிறுவ வேண்டும் என்று கூறுகிறது.

இவ்நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தின்படி ஒரு நபர் நிகழ்நிலையில் பதிவிடுவதை அல்லது பகிர்வதை குற்றமாக்க முடிவதுடன் இது 20 ஆண்டுகள் வரை தண்டனைத் தடைகளை விதிக்கும்.

இந்தச் சட்டமூலத்தால் குடிமக்கள் நேரடியாக எதிர்கொள்ளவுள்ள சவால்கள்.

நியாயமற்ற தன்னிச்சையான அல்லது தற்காலிகமான முறையில் செயல்படுத்தக்கூடிய அதிகப்படியான மற்றும் தெளிவற்ற குற்றங்களை இந்த சட்டமூலம் உருவாக்குகிறது.

ஒப்புதலுக்கு உட்பட்டு தன்னிச்சையான அடிப்படையில் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை நீக்கக்கூடிய ஜனாதிபதியால் நேரடியாக நியமிக்கப்படும் ஆணைக்குழுவுக்கு தெளிவற்ற வரையறுக்கப்பட்ட, பரந்த அதிகாரங்களை இந்த சட்டமூலம் வழங்குகிறது.

இந்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது மற்றும் சட்டமாக்க முடியாது என்ற அடிப்படையில் சட்டமூலத்தின் அரசியலமைப்புத்தன்மை சவாலுக்கு உட்படுத்தக் கூடியது என்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவிக்கிறது.

இந்த சட்டமூலம் அமைச்சரால் நிபுணர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட தனிப்பட்ட பிரஜைகளுக்கு பரந்த மற்றும் அதிகப்படியான தேடல் மற்றும் பறிமுதல் அதிகாரங்களை வழங்குகிறது.

அவை தன்னிச்சையானவை மற்றும் கணிக்கமுடியாதவை. அரசியலமைப்பின் 14(1) (), (டி) (), (), () மற்றும் () மற்றும் உறுப்புரை 10 ஆகியவற்றால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமை போன்ற அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்துவதை இந்த சட்டமூலம் சட்டவிரோதமாக கட்டுப்படுத்தி முடக்குகிறது.

 நிகழ்நிலை பாதுகாப்பு ஆணைக்குழுஎன்றால் என்ன?

நிகழ்நிலை பாதுகாப்பு ஆணைக்குழுவானது அரசியலமைப்பு பேரவையின் அனுமதிக்கு உட்பட்டு இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஐந்து உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்










 

 

SHARE

Author: verified_user

0 Comments: