மட்டக்களப்பு சீயோன் தேவாலய புத்தாண்டு நள்ளிரவு ஆராதனை.
உலகம் முழுவதும் வெகுவிமர்சையாக 2024 புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாடெங்கும் தேவாலயங்களில் ஆராதனைகள் இடம்பெற்று வருகின்றன. கடந்த 4 வருடங்களுக்குப் பின் இம்முறை புத்தாண்டு நள்ளிரவு ஆராதனைகள் வெகு விமர்சையாக இடம்பெற்றது
தேவேளை மட்டக்களப்பு சீயோன் தேவாலய புத்தாண்டு நள்ளிரவு ஆராதனைகள் தேவாலயத்தின் தலைமை போதகர் ரொஷான் மகேசன் தலைமையில் மட்டக்களப்பு பிள்ளையாரடியில் உள்ள சியோன் தேவாலயத்தில் இடம்பெற்றது. இங்கு புத்தாண்டு பற்றிய நல்லாசி உரைகளும், நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி சிறப்பு ஆராதனைகளும் இடம்பெற்றன.
பிறந்துள்ள புத்தாண்டை கைதட்டி வரவேற்றதோடு போதகரால் புத்தாண்டு செய்தியும் வாசிக்கப்பட்டது. இப்புத்தாண்டு நள்ளிரவு ஆராதனையில் பெருமளவான கிறிஸ்தவ பொதுமக்கள் கலந்து கொண்டனர். சீரற்ற கால நிலைக்கு மத்தியிலும் இடம்பெற்ற புத்தாண்டு நள்ளிரவு ஆராதனைகள் போது ஆலய சுற்றுப்புறத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment