1 Jan 2024

புத்தாண்டில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியலயத்தில் நடைபெற்ற சத்தியப்பிரமாண நிகழ்வு.

SHARE

புத்தாண்டில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியலயத்தில் நடைபெற்ற சத்தியப்பிரமாண நிகழ்வு.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில்  10மில்லியன் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்ட வெளியரங்கில் பிறந்துள்ள புதிய ஆண்டில் முதல் தடவையாக திங்கட்கிழமை(01.01.2024) காலை சுகாதார ஊழியர்கள் சத்திய பிரமாணம் செய்து தமது கடமைகளை ஆரம்பித்தனர்.

பிறந்துள்ள புதிய ஆண்டில் சுகாதார   அமைச்சின் சுற்று நிருபத்திற்கு ஏற்ப மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல சுகாதார பணிமனைகளும்இன்றயத்தினம், காலை  சத்திய பிரமாணம் செய்து தமது கடமைகளை ஆரம்பித்தனர். மட்டக்களப்பு  மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் வைத்தியர்  ஜி.சுகுணன்  தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைத்த பின்பு நாட்டின் அமைதிக்காக உயிர் நீத்த வீரர்களுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு இதன் பின்பு  சுகாதார ஊழியர்கள் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர்.

பிறந்துள்ள புதிய புத்தாண்டை முன்னிட்டு  புத்தாண்டு வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொண்டதுடன் இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் மண்முனை வடக்கு பிராந்திய சுவார சேவை பணிப்பாளர், மற்றும் வைத்தியர்கள் தாதியர்கள் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.











 

SHARE

Author: verified_user

0 Comments: