16 Jan 2024

பயங்கரவாத தடுப்புச் சட்டமும் வேண்டாம் எதிர்புச் சட்டமும், வேண்டாம். நேட்டோ அணியுடன் இலங்கை சேர்ந்து விட்டதா?

SHARE

பயங்கரவாத தடுப்புச் சட்டமும் வேண்டாம் எதிர்புச் சட்டமும், வேண்டாம். நேட்டோ அணியுடன் இலங்கை சேர்ந்து விட்டதா?

ற்போது பாராளுமன்றத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக பயங்கரவாத எதிர்புச் சட்டத்தைக் கொண்டுவருவதற்குரிய முஸ்த்தீப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நமது நாடு சனநாயக நாடு என நாம் சிலாகித்துப் பேசிக் கொண்டிருக்கின்றோம். இந்நிலையில்தான இந்த சட்டம் தொடர்பில் பேசப்படுகின்றது. .எம்.எவ். இடமிருந்து கடன்பெற வேண்டும், சர்வதேச சமூகத்தையும், மனித உரிமை அமைப்புக்களையும் சமாழிக்க வேண்டும் என்ற அடிப்படையில், இதனைச் செய்கின்றார்கள்.

என தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். செவ்வாய்கிழமை(16.01.2024) மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் அவரது ஆதரவாளர்களைச் சந்தித்து விட்டு ஊடகங்களுக்குக் கதுத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்

2009 ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் விடுதலைப் புலிகளின் பக்கமிருந்து ஒரு துப்பாக்கியும் வெடிக்காத நிலையில் இச்சூழல் சரியாக சென்று கொண்டிருக்கின்றது. ஆனால் 2019 இல் ஏப்ரல் குண்டுவெடிப்பானது ஆட்சி மாற்றத்திற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு உத்தியாகும். ஏப்ரல் குண்டு வெடிப்பானது முஸ்லிம் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டது என்றாலும் கூட ஆட்சிமாற்றத்திற்கான ஒரு செயற்பாடாகத்தான் அதனை செய்துள்ளார்கள். எனவே ஒரு பயங்கவரவாத செயல் இலங்கையில் நடைபெறவேண்டும். என்பதற்காகத்தான் அவர்கள் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டு வருகின்றார்கள்.

இந்த நாட்டில் குண்டுகள் வெடிக்காமல் துப்பாக்கிகள் வெடிக்காத ஒரு சூழ்நிலையை அரசாங்கம் விரும்பவில்லைபோல் தெரிகின்றது. சனநாயகமாகப் பயணிக்க வேண்டிய நாட்டிக்கு பயங்கரமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தேவையற்றது. விடுதலைப் புலிகள் பக்கத்திலிருந்து எதுவித குண்டுவெடிப்புக்களும் இடம்பெறாத நிலையில் அரசு ஏன் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என கேட்கின்றேன். சட்டவாட்சி, நீதித்துறையின் சுதந்திரம், போன்றவற்றைப் பற்றிப் பேசுவதாக இருந்தால், பயங்கரவாத தடுப்புச்சட்டமும், எதிர்புச் சட்டமும் வேண்டாம். என்பதை பொறுப்புடன் கூறிக் கொள்கின்றேன். எனத் தெரிவித்த அவர், 

செங்கடலில் கூர்திக் கிளற்சியாளர்களை அடக்குவதற்காக இலங்கை ஜனாதிபதி ஒரு கப்பலை அனுப்புவதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அமெரிக்காவின் தலைமையில் நேட்டோ அணியினர் கூர்த்திப் படைகளுக்கு எதிராக தாக்குதல் நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள். என்றால் நேட்டோ அணியில் தாராளமாக அதனை முறியடிப்பதற்கான சக்தி இருக்கின்றபோது இலங்கை அணிசேராக் கொள்கையை உதறித் தள்ளிவிட்டு 250 மில்லியன் டொலரைச் செலவு செய்து ஏன் செங்கடலுக்கு இலங்கைப் படையினரை ஏன் அனுப்ப வேண்டும்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட  எமது மக்களுக்கு ஒரு முழுமையான தீர்வை முன்வைக்காத நிலையில், அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தால் அயலவர்கள் வீடுகளில் தற்போதும் வசித்து வருகின்ற போதில் தற்போது இலங்கை நேட்டோ அணியுடன் சேர்ந்து போர்க்கப்பலை அனுப்பக்கூடிய நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்றால், நாங்கள் எங்கிருக்கின்றோம் உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கின்றது.

அணிசேராக் கொள்கையை விடுத்து நேட்டோ அணியுடன் இலங்கை சேர்ந்து விட்டதா என்ற கேள்வியை இலங்கை அரசிடம் நாம் கேட்கின்றோம். மொத்ததில் அணிசேராக் கொள்கை, சட்டவாட்சிக் கொள்கை, ஜனநாயகப் பாங்கான ஆட்சிமுறையும் இல்லாமல் நாம் தலைகீழாகச் சென்றுகொண்டிருக்கின்றோமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டால் நாங்கள் அமெரிக்காவாக மாறிவிட முடியாது. அமெரிக்கா உலக வல்லரசு நாடு அதனுடன் இணையும்போது 250 மில்லியன் டொலர்களை இலங்கை அரசு செலவு செய்யப் போகின்றது. எனவே நாம் வங்குரோத்து அடைந்த நிலையிலிருந்து பட்டிப்படியாக முன்னேறும் நிலமைக்கு இன்னும் வரவில்லை. இந்நிலையில் உலகத்தில் நடைபெறுகின்ற யுத்தம் தொடர்பான விடையங்களில் தேவையில்லாமல் ஒருபக்கச் சார்பாக நடந்து கொள்வது என்பது, ஒபேக் நாடுகளைப் பகைத்துக் கொண்டு இலங்கையை அவ்வாறான நாடுகள் ஓரம்கட்டும் நிலமைக்குத் தள்ளிவிடக்கூடாது. எனவே இலங்கை அரசு இவ்விடையத்தில் மிகவும் கவனமாக நடாந்து கொள்ள வேண்டும். என ஜனாதிபதிக்கும், அரசுக்கும் ஆலோசனை கூறிக் கொள்கின்றேன். என அவர் இதன்போது தெரிவித்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: