21 Oct 2025

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுதாவளை பொது நூலகத்திற்கு முன்னால் பாரிய விபத்து ஒருவர் இஸ்த்தலத்திலேயே பலி

SHARE

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுதாவளை பொது நூலகத்திற்கு முன்னால் பாரிய விபத்து ஒருவர் இஸ்த்தலத்திலேயே பலி.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுதாவளை பொது நூலகத்திற்கு முன்னால் இன்று செவ்வாய்கிழமை(21.10.2025) முற்பகல் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர். 

குறித்த  முதியவர் வீதியைக் குறுக்கீடு செய்த வேளை கல்முனை பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த லொறி ஒன்றின் மீது மோதியதாலேயே இவ்விபத்துச் சம்பவித்துள்ளது. 

இவ்விபத்துச் சம்பவத்தில் குறித்த முதியவர் இஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், இதில் உயிரிழந்தவர் அப்பகுதியில் வீதியில் நடமாடித் திரிபவர் என அப்பகுதியிலுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில் சடலத்தை பொலிசார் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

















SHARE

Author: verified_user

0 Comments: