8 Dec 2023

கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலயத்தின் சாதனை.

SHARE


கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலயத்தின் சாதனை.

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக் கல்வி  அலுவலகத்திற்குட்பட்ட கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் பழையமாணவர் சங்கத்தினரும், பாடசாலை சமூகத்தினரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சாதனையாளர்கள் கௌரவிப்புவிழா பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், மாணவர்கள், பழையமாணவர் சங்கத்தினர், மற்றும் பெற்றோர்களும்  கிராம மக்கள் என பலரும் இதன்போது கலந்து சிறப்பித்திருந்தனர்.

பாடசாலை வரலாற்று சாதனையாக அண்மையில் வெளியாகிய .பொ. சாதாரணதர பரீட்சையில் 9 சித்திபெற்ற மாணவி ரவிச்சந்திரன் யோகிதா, மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 153 புள்ளிகளைப் பெற்று சித்தியெய்திய மாணவன் விவேகானந்தம் சுவிஜன், அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் அனுசரணையுடன் கலாநிதி பட்டப்படிப்பினை பயிலச்சென்ற  தம்பிப்பிள்ளை ரிஷான் மேலும் அப்பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றி தற்சமயம் அதிபர் சேவைக்கான பரீட்சையில் சித்தி பெற்ற சு.ஜீவராஜ் ஆசிரியர் ஆகியோரிற்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி மலர்மாலைகள் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் இதன்போது கல்விப் பொதுத்தர சாதாரணதர பரீட்சையில் சித்தியெய்தி உயர்தர கல்விக்கு தெரிவான ஏனைய 17 மாணவர்களுக்கும், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 100க்கு மேற்பட்ட புள்ளிகளைப்பெற்ற மாணவர்கள் 10 மாணவர்களுக்கும், இதன்போது  பரிசில்கள் வழங்கி இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.













SHARE

Author: verified_user

0 Comments: