ஊடகவியலாளர் தேவப்பிரதீபனிடம் பொலிசார் வாக்குமூலம்.
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் இலட்சுமணன் தேவப்பிரதீபனிடம் வாழைச்சேனைப் பொலிசார் வெள்ளிக்கிழமை(08.12.2023) பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.
இவ்விடையம் குறித்து ஊடகவியலாளர் இலட்சுமணன் தேவப்பிரதீபன் தெரிவிக்கையில்… கடந்த கடந்த 06.12.2023 அன்று அலைபேசி மூலம் எனக்கு வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்திலிருந்து அழைப்பு வந்தது. அதில் என்னை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டனர். எனக்கு நீங்கள் எழுத்து மூலம் கடிதம் தரும் பட்சத்திலேயேதான் பொலிஸ் நிலையத்திற்கு வரமுடியும் என நான் தெரிவித்ததற்கு இணங்க வியாழக்கிழமை எனது அண்ணாவின் வீட்டுக்கு வந்த பொலிசார் சிங்களத்தில் எழுதப்பட்ட அழைப்பு ஒன்றை வழங்கிவிட்டுச் சென்றுள்ளனர்.
அதற்கிணங்க வெள்ளிக்கிழமை(08.12.2023) வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்திற்குச் சென்றேன். அங்கு முற்பகல் 10.55 இலிருந்து 11.25 வரையும் என்னிடம் பொலிசார் வாக்கு மூலத்தைப் பதிவு செய்தனர்.
கடந்த 27.11.2023 அன்று நீங்கள் எங்கு சென்றீர்கள், உங்களது உறவினர்கள் யாராவது மாவீரராகியுள்ளனரா? யாரது அழைப்பின் பெயரிலா தரவை மாவீரர் துயிலுமில்லத்திற்குச் சென்றீர்கள், அந்த மயானத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்திலிருந்து உயிரிழந்தவர்களின் உடல்களா புதைக்கப்பட்டுள்ளன. 27 ஆம் அதிகதி அங்கு என்ன நடைபெற்றது போன்ற கேள்விகளை என்னிடம் தமிழில் ஓர் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கேட்டுக் கேட்டு மற்றுமொரு பொலிஸ் உத்தியோகதியோகஸ்த்தரிடம் சிங்களத்தில் மொழிபெயர்த்து கூறினார்.
நான் வருடாந்தம் செய்து சேகரிப்புக்காக மாவீரர் தினத்தில தரவை மாவீரர் துயிலுமில்லத்திற்குச் செல்வது வழக்கம். அதபோன் இம்முறையும் அங்கு சென்று செய்தி சேகரித்துவிட்டு வந்தேன். அங்கு செல்லுமாறும், அற்கு வருமாறும் யாரும் எனக்கு அழைப்பு விடுக்கவுமில்லை, என பதிலுக்கு பொலிசாரிடம் தெரிவித்தேன். எனக்கு இது தொடரபில் வழக்குப்பதிவு செய்துள்ளீர்களா என நான் பொலிசாரிடம் கேட்டபோது இல்லை மேலிடத்திலிருந்து வந்த உத்தரவுக்குமைய வாக்குமூலம் பதிவு செய்கின்றோம் என பொலிசார் தெரிவித்தாக இதன்போது ஊடகவியலாளர் இ.தேவப்பிரதீபன் தெரிவித்தார்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)


0 Comments:
Post a Comment