25 Dec 2023

பிள்ளையானை விமர்சிப்பதற்கு நாடாளுமண்றம் செல்ல வேண்டுமா? பிரசாந்தன் கேள்வி.

SHARE


பிள்ளையானை விமர்சிப்பதற்கு நாடாளுமண்றம் செல்ல வேண்டுமா பிரசாந்தன் கேள்வி.

மட்டக்களப்பில் இருந்து  தெரிவு செய்யப்பட்ட சகோதர பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கிய ராகுல் ராஜபுத்திரன் அவர்கள்  பாராளுமன்றத்திற்கு செல்வது  சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களை விமர்சிப்பதற்காக மாத்திரமே பிள்ளையானை விமர்சிப்பதற்காவா மக்கள் வாக்களித்தார்கள் தமிழர்கள் நாளார்ந்தம் பல பிரச்சினைகளுடன் வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள் இவர்களின் பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட அமைச்சுடனும் அதிகாரிகளுடனும் பேசி தீர்வுபெற்றுக் கொடுங்க வேண்டியவர்கள் பிள்ளையானுக்கு பேசினால் போதும் என்றுள்ளனர்  இதுதான் தமிழ்தேசியத்தின் கொள்கை? என பூபாலபிள்ளை பிரசாந்தன் கேள்வியெழுப்பியுள்ளார்.

வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் வீதிகள் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் மட்டக்களப்பு மாவட்டம் பாலையடித்தோணா பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை(24.12.2023) கொங்கிறீட் வீதி அமைக்கும் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு முன்னாள் கிழக்கு மாகான சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்…  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்; எதிர்காலத்தில் நம்பிக்கையுள்ள மக்கள் சமூகமாகத்தினை கட்டியெழுப்புவதற்காக  தன்னாலான முயற்சிகளை செய்து மக்களை வலுவாக்குவதற்காக அல்லும் பகலும் பாடுபட்டுக்கொண்டிருக்கின்றார். இப் பிரதேசத்தில்; மாத்திரம் சுமார் 7 கோடி ரூபாய் பெறுமதியான வீதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இப்பிரதேசத்திற்கு வருகின்றபோது வரமுடியாத அளவிற்கு இடுப்பளவில் தண்ணீர் பாய்ந்து கொண்டிருக்கின்றது இப்பிரதேசத்தில் இருந்து பாடசாலைக்கு மாணவர்கள் செல்லவேண்டுமாக இருந்தால் பாதணிகளுடனோ நீளக்காற்சட்டையுடனோ செல்லமுடியாது. அதனை கழற்றி கையில் எடுத்தே செல்லவேண்டும் என்ற துர்பாக்கிய நிலையிலே இப்பிரதேச மாணவர்கள் உள்ளனர்.

 எங்கு சென்றாலும் மக்கள் முதலாவதாக கேட்கின்ற விடயம் போக்குவரத்து வசதி செய்து கொடுங்கள் என்பது அந்தடிப்படையில் பாதைகளை அமைக்கின்ற பணியினை கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மாவட்டம் பூராகவும் சிறப்பாக செய்துகொண்டு இருக்கின்றார். ஆனால் இதனை பொறுக்காமல் தமிழ்தேசியம் பேசுகின்ற தலைமைகள் கிட்டத்தட்ட 72 வருடங்களாக எவ்வாறு தமிழர்களை அடக்கி ஏமாற்றி அவர்களது சொல்லுக்கு அடிபணிந்திருக்க வேண்டுமோ என்ற கோட்பாடுடன் பயணித்தார்களோ  அதேபோன்று எதுவும் இல்லாமல் தொடர்ந்தும் மாற்றுசமூகத்தினரிடம் சாதாரண அபிவிருத்தியை கூட கையேந்தி யாசகம் கேட்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.

வீதி அபிவிருத்தி பணிகளை குழப்புவதற்காக குறிப்பாக களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி பணிகள் இடம்பெற்றவேளையில் எமது கட்சியின் ஆதரவாளர்களை தாக்கியிருந்தார்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மக்கள் மீது நம்பிக்கை வைத்து மக்களை வலுவாக்க வேண்டும் கிழக்கு மாகாணத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பயணிக்கின்ற கட்சி என்றடிப்படையில் தொடர்ந்தும் மிக அமைதியாக மக்களின் தேவைகளை சிரமேற்று செயற்படுத்திக்கொண்டிருக்கின்றோம்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மிக வேகமாக மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றது நாடாளுமன்றத் தேர்தல் நடக்கின்றபோது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி  மட்டக்களப்பில் அதிகமான ஆசனங்களை கைப்பற்றும் என்றடிப்படையில் மக்கள் தெளிவாகஇருக்கின்றார்கள் கட்சிமீதும் தலைவர் மீதும் வசைபாடுவதை மாத்திரம் தொழிலாக கொண்டு செயற்படுகின்ற அரசியல் தலைமைகள் அதனை நிறுத்தி விட்டு மக்கள் படுகின்ற இன்னல்களை மக்கள் படுகின்ற கஸ்டங்களை தீர்த்து வைப்பதற்காக மக்களை நோக்கி செல்ல வேண்டும்.

மக்கள் வாக்களித்தாலும் வாக்களிக்காமல் விட்டாலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பயணம் என்பது மக்களின் அபிவிருத்திக்காக மக்களின் வலுவாக்கத்திற்காக தொடர்ந்து பயணிக்கும் எனவும் தெரிவித்தார்.

இன் நிகழ்வில்  கட்சியின் பிரதிச் செயலாளர் யோ.சந்திரகுமார் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் பிரதேசசபை உறுப்பினருமான திருநாவுக்கரசு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
SHARE

Author: verified_user

0 Comments: