பால்நிலை சமத்துவம் மற்றும் போதைப் பொருள்பாவனைகளை ஒழித்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வென்று மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை(08.12.2023) இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர் சங்கத்தினர், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆலய மற்றும் கிராம பொது நிர்வாக அமைப்புக்களின் பிரதிநிதிகள், என பலர் கலந்து இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கலந்துகொண்டிருந்த பொலிஸ் அதிகாரிகளினால் மாணவர்கள் மத்தியில் பால்நிலை சமத்துவம் மற்றும் போதைப்பொருள்பாவனையின் தீமைகள் தொடர்பில் விரிவாக தெளிவூட்டப்பட்டதுடன், மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டதுடன.
இவ்விடையங்கள் தொடர்பில் தகவர்களை வழங்குவதற்கு இதன்போது விசேட குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டதுடன், மேலும் அவைதொடர்பான விளக்கங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களும் மாணவர்களுக்கு வினியோகிக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment