களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒளி விழா.
குருக்கள்மடம் புனித பிரான்சிஸ் அசிசீயார் தேவாலய அருட்தந்தை ஜீ.அம்றோஸ், ஒளியேற்றும் உலக பணிச்சபையின் அருட்திரு அ.நிரஞ்சன் ஆகியோரின் ஆசிச்செய்தியுடன் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
பெரியகல்லாறு தூய அருளானந்தர் தேவாலய மாணவர்கள் மற்றும் தேற்றாத்தீவு புனித யூதா ததேயு தேவாலய மாணவர்களினால் கரோல் கீதம், நாடகம், நடனம் போன்ற பல கலைநிகழ்வுகள் ஆற்றுகை செய்யப்பட்டதுடன், பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் பாடல்களும் இசைக்கப்பட்டன.
இதன் போது நத்தார் தாத்தா வருகையுடன், நிகழ்வுகளை ஆற்றுகை செய்த மாணவர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகௌரி தரணிதரன், நிருவாக உத்தியோகத்தர் வே.தவேந்திரன், அலுவலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் உட்பட அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 Comments:
Post a Comment