மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படும் டெங்கு பரிசோதனை நடவடிக்கை.
கிழக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சுகாதார அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக டெங்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
டெங்கு நோய் பரவும் மாவட்டங்களில் கிழக்கு மாகாணத்தில் முதன்மையாக காணப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கிழக்கு மாகாண ஆளுனரின் உத்தரவின் பெயரில் மட்டக்களப்பு நகரில் விசேட டெங்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளன. மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் அவர்களில் தலைமையில் இந்த விசேட டெங்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எஸ்.சிவலிங்கம் மாநகர சபை ஊழியர்கள் பொதுச் சுகாதார பரிசோதவர்கள் என பலரும் இந்த விசேட டெங்கு பரிசோதனை நடவடிக்கைகளில் கலந்து கொண்டுள்ளனர். அரச ஊழியர்களை பாதுகாக்கும் வகையிலும் காரியாலயங்களுக்கு வரும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், இந்த விசேட திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு மாநகர சபை வளாகம் செவ்வாய்கிழமை(21.11.2023) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. தற்போது மாநகர சபை வளாகத்தில் உள்ள பொது கிணறுகள் களஞ்சியங்கள் நீர் தொட்டிகள் பூங்காக்கள் என சுற்றுப்புற சூழல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
0 Comments:
Post a Comment