மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்புக்குத் தடை.
மாவீரர்களின் பெற்றோருக்கு உலர் உணவுப் பொருட்கள், மற்றும் மரக்கன்றுகள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வொன்று ஜனநாயக் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை(25.11.2023) காலை அக்கட்சியின் மட்டக்களப்பு வெல்லாவெளியில் அமைந்துள்ள மட்.அம்பாறை மாவட்ட தலைமைச் செயலகத்தில் நடாத்துவதற்கு முழு ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தன.
அக்கட்சியின் வளாகம் துப்பரவு செய்யப்பட்டு சிவப்பு, மஞ்சள் நிறக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் காலைவேளையிலேயே மாவீரர்களின் பெற்றோர் நிகழ்வுக்கு வருகைதந்து நிழ்வு ஏற்பாடு செய்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்த இந்நிலையில் வெல்லாவெளிப் பொலிசாரால் நிகழ்வின் ஏற்பாட்டாளரும் ஜனாநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவருமான நகுலேஸிற்கு குறித்த நிகழ்வை நடாத்துவதற்குத் தடைவித்தித்து களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றிலிருந்து தடை உத்தரவு ஒன்றைப்பெற்று வழங்கியுள்ளதுடன், இன்று பிற்பகல் நீதிமன்றிற்நு சமூகமளித்து குறித்த நிகழ்வு தொடர்பில் விளக்கமளிக்குமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம் மாவீரர்களின் புகைப்படங்களை ஏந்தவில்லை எனவும், இது பெற்றோர்களுக்கு உணவு வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு மாத்திரமே இதற்கு தடை ஏற்படுத்த வேண்டாம் என இதன்போது பொலிசாரிடம் கண்ணீர் மல்க வருகை தந்திருந்த பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் அவ்விடத்தில் சுமார் 10 இற்கு மேற்பட்ட பொலிசார் மற்றும் புலனாய்வாளர்கயும், கடமையில் ஈடுபட்டுள்ளதுடன், குறித்த நிகழ்வு தொடர்பான பதாகையை பொலிசார் கழற்றிச் சென்றுள்ளதுடன், வாக்குமூலம் பெறவேண்டும் எனத் தெரிவித்து ஜனாநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைர் நகுலேஸை வெல்லாவெளிப் பொலிசால் அவர்களது வாகனத்தில் ஏற்றுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் நிகழ்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் வருதைதந்த மாவிரர்களின் பெற்றோர்கள் அவ்விடத்திலேயே உள்ளனர்.
0 Comments:
Post a Comment