மட்டக்களப்பு மாவட்டம் சிவானந்தா கல்வி மேம்பாட்டுப் பேரவையால் வறுமைக் கோட்டிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் நலன் கருதி மாதந்தோறும் நடைபெற்றுவரும் மகிழ்ச்சிகர மாணவர் பயணத் திட்டத்தின் 13வது செயற்பாடு மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மங்கிகட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் அதன் முதல்வர் எம்.கலைச்செல்வன் தலைமையில் இடம்பெற்றது.
பாடசாலையில் கல்வி பயில்கின்ற வறுமைக்கோட்டிற்குட்பட்ட சுமார் 27 மாணவர்கள் இத்திட்டத்தினூடாக பயனடைந்தனர். இதன்போது மாணவர்கள், பெற்றோர்கள், அதிபர்,ஆசிரியர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
மகிழ்ச்சிகர மாணவர் பயண கருத்திட்ட சிந்தனையாளரும் காரண கர்த்தாவுமான செல்லத்துரை பிறேமானந்தன், பேரவை உறுப்பினரும் முல்லைத்தீவு வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணருமான வைத்திய கலாநிதி த.சுஹாஜனன், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டு மாணவர்கள் மேம்பாட்டில் பெற்றோர்களின் வகிபாகம் தொடர்பாக ஆழமான உதாரணங்களை முன்வைத்து பெற்றோர்களுக்கு சிறந்த கருத்துப் பகிர்வினை நிகழ்த்தியிருந்தனர்.
கல்வியெனும் மிகப்பெரும் ஆயுதம் ஒன்றே சமூக மேம்பாட்டிற்கான அடிப்படை எனும் கருத்தினை வலியுறுத்தி அடிப்படை உதவித் திட்டக் கருத்துக்களை இணைத்து பேரவை உறுப்பினர் அ.சித்தார்த்தன் இதன்போது தெளிவுபடுத்தியிரந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment