எதற்காக போராடிக் கொண்டிருக்கின்றோமோ அது இன்றுவரையில் கிடைக்கவில்லை – கருணாகரம் எம்.பி ஆதங்கம்.
நாங்கள் எதற்காக ஆயுதம் துக்கினோமோ? எதற்காக ஆயுதப் போராட்டம் நடாத்தினோமோ தற்போதும் அரசியல் ரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும், எதற்காக போராடிக் கொண்டிருக்கின்றோமோ அது இன்றுவரையில் கிடைக்கவில்லை.
என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான, கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்துள்ளார்.
அவரது 60 வது பிறந்த நாளில் “ஜனாவின் வாக்கு மூலம்” எனும் மணிவிழா மலர் வெளியீட்டு ஞாயிற்றுக்கிழமை(02.09.2023) மாலை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது. இன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் இதன்போது கருத்துத் தெரிவித்த அவர் 1960களில் ஆயுதப் போராட்டம் தொடங்கப்பட்டிந்தாலும், 1983இல் இடம்பெற்ற இன அழிப்பைத் தொடர்ந்துதான் விடுதலைப் போராட்டம் வீரியம் கொண்டது. ஆனால் தற்போது தமிழ் மக்கள் 1983 ஆண்டிற்கு முற்பட்ட காலத்திலேதான் இருக்கின்றார்கள்.
40 வருடங்களாக போரட்டத்தின் மூலதாக இழந்த அத்தனைக்கும் நாங்கள் இன்னமும் விடிவு காணவில்லை. 2009 இற்கு முன்னர் நாங்கள் ஆயுத அரசியலில் மிகவும் பலமடைந்திருந்தோம். அதற்கு மேலாக மிகவும் ஒற்றுமையாக இருந்தோம். எங்கோ இருந்து ஒரு வார்த்தை வரும் அந்த வார்தையின் பிரகாரம் தமிழ் கட்சிகளும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையாகச் செயற்படுவார்கள்.
ஆனால் முன்னர் ஒற்றுமையாக இருந்த காலத்தை விட பல மடங்கு ஒற்றுமையாக இருக்க வேண்டிய இக்காலத்திலே பல பிரிவுகளாகப் பிரிந்திருக்கின்றோம். ஜனநாயத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பாகும். கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்புமனுக் கோரப்பட்டிருந்தபோது தமிழரசுக் கட்சிதான் தனி வழி சென்றது.
இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி என்ற போர்வையிலே பலமடைந்துள்ளது. தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு நிருவாகக் கட்டமைப்புயாப்பு அனைத்தும் ஒருங்கே அமைந்துள்ளது. அதிலே நாம் மிகத் தெழிவாகக் கூறியிருக்கின்றோம். ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியுடன் தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளைப் பெறுவதற்காக நாங்கள் பாடுபடுவோம். எங்களுடன் இணைந்து செயற்படுவதற்கு எந்தக் தமிழ் கட்சி வந்தலும் அவர்களுக்கும் சம உரிமையுன் அவர்களையும் நேசித்து தொடற்சியாக ஒற்றுமையுடன் செயற்படுவோம். அததுதான் என்னுடைய இலக்கு என்பதையும் எனது இந்தப் புத்தகத்திலும் தெரிவித்துள்ளேன். என அவர் இதன்பேது மேலும் தெரிவித்தார்.
,
0 Comments:
Post a Comment