வன்னிஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் போரதீவுப்பற்றில் நடைபெற்ற சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு.
சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகமும் சமூர்த்தி திணைக்களமும் இணைந்து வன்னிஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின விழா செவ்வாய்க்கிழமை(03.10.2023) பலாச்சோலை கருணைமலைப் பிள்ளையார் ஆலய முன்றலில் இடம்பெற்றது.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிகதிகளாக போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் சாதனை படைத்த சிறுவர்களும், முதியோர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் இந்நிகழ்வில் வன்னிஹோப் நிறுவனத்தின் மாவட்ட இணைப்பார் சீ.ரேகா, பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் துலாஞ்சனன், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சசிகுமார், கணக்காளர் அம்பிகாபதி, சமூர்த்தி திணைக்கள அதிகாரிகள் பிரதேச செயலகத்தின் ஏனைய உத்தியோகஸ்த்தர்கள், முன்பள்ளி பாடசாலைகளின் சிறுவர்கள், முதியோர்கள், பாடசாலை மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சிறுவர்களினதும், முதியோர்களினதும் பல கலை நிகழ்ச்சிகள் ஆற்றுகை செய்யப்பட்டதுடன், கலந்து கொண்ட சிறுவர்களுக்கும், முதியோர்களுக்கும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிலையில் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் சாதனை படைத்த சிறுவர்களும் முதியோரும் இதன்போது பொன்னாடை போரத்தி பரிசில்களும், ஞாபகச் சின்னங்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.
0 Comments:
Post a Comment