மாவட்டமட்ட ஆங்கில தினப் போட்டியில் வம்மியடியூற்று வாணி வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் முலாமிடம்.
மாவட்டமட்ட அங்கில தினப்போட்டி கடந்த 29.08.2023 அன்று நடைபெற்றது. தற்போது அதன் பெறுபேறு வெளியாகியுள்ளது.அதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலத்திற்குட்பட்ட வம்மிடியூற்று வாணி வித்தியாலயத்தைச் சேர்ந்த தரம் 10 இல் கல்வி பயிலும் சிவமோகன் தேனுஸ்ஜா மற்றும் தரம் 7 இல் கல்வி பயிலும் சிவமோகன் நிதுஸ்சா ஆகிய இருவரும் hand writing print போட்டியில் முதலாம் இடங்களைப் பெற்று பாடசாலைக்கும் அக்கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக வம்மியடியூற்று வாணி வித்தியாலய நிருவாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
மேற்படி இரு மாணவர்களும் உடன் பிறந்த சகோதரிகளாவர். மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் வசதி வாய்ப்புக்களோடு அமைந்துள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களோடு அதிகஸ்ற்றப் பிரதேசத்திலுள்ள இந்த மாணவர்கள் போட்டியிட்டு இவ்வாறு இரு முதலிடங்களைப் பெற்றுள்ளமையானது மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு வலயத்திற்கே பெருமைசேர்த்துள்ள விடையமாகும். இவ்வாறு வெற்றிபெற்றுள்ள மாணவர்களை கல்விச் சமூகத்தினர் பாராட்டி வருகின்றனர்.
0 Comments:
Post a Comment