கிராமப்புரங்களில் டிஜிட்டல் கல்வியை மேம்படுத்துவதில் இரட்ணம் பவுன்டேஷன் மற்றும் வன்னி ஹோப் நிறுவனங்களின் சேவைகள் மகத்தானதாகும். - வன்னி ஹோப் நிவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் பாரிஸ்.
இரட்ணம் பவுன்டேசன் ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் வன்னி ஹோப் அவுஸ்ரேலியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து கணினி பயிற்சி நடாத்தி பயிற்சி நெறியினை நிறைவு செய்த முதலாம் வருட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு சேனையூர் அனாமிக்கா பண்பாட்டு மையத்தில் அதன் ஸ்தாபகர் பேராசிரியர் பாலசுகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.இந்த நிகழ்வில் பிரதிம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தாா்.
அவர் இதன் போது மேலும் தெரிவிக்கையில், தற்போது இளைஞர் யுவதிகளின் எதிர்காலம் பற்றி யோசிக்க வேண்டிய தருணத்தில் நாங்கள் அனைவரும் இருக்கின்றோம். இளைஞர்களுடைய எதிர்காலம், வாழ்வியல், அவர்களது அமைதியான வாழ்க்கை போன்றவற்றை கருதத்திற்கொண்டு, கணனி அறிவினை விரித்தி செய்யும் பணிகளில் இரட்ணம் பவுன்டேஷன் மற்றும் வன்னி ஹோப் நிறுவனங்கள் செயற்பட்டுவருவதில் நாம் பெருமை கொள்கின்றோம்.
தற்கால போட்டி நிறைந்த ஒரு காலகட்டத்தில் நவீன கல்வி முறைமைக்கு ஏற்றவகையில் கிராமப்புரங்களில் கணனி அறிவினை மேம்படுத்தும் முயற்சியில் இவ்விரு நிறுவனங்களும் செயற்பட்டு வருகின்றது. கடந்த கோவிட் காலங்களில் கணனி அறிவினதும் நிகழ்நிலைக் கற்றலின் முக்கியத்துவமும் பலராலும் உணரப்பட்டது. இந்த முக்கியத்துவத்தினை கருத்திற்கொண்ட நாங்கள் இலங்கைத் தீவில் இதுவரை சுமாா் 100 இற்கும் மேற்பட்ட திறன் வகுப்பறைகளை பாடசாலைகளில் ஸ்தாபித்து அதிநவீன கற்றல் கற்பித்தல் சூழலுக்கு மாணவர்களை கொண்டு சென்றமைக்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பெருமையை இவ்விரு நிறுவனங்களும் கொண்டுள்ளதை இங்கு சுட்டிக்காட்ட விருதம்புகின்றேன்.
நம் இளைஞர் சமூகத்தினுடைய எதிர்காலம், தொழில் வாய்ப்புகள், தொழில் சாா் தகைமைகள் என்பவற்றினைக் கருத்திற் கொண்டு கணனி வளநிலையம் ஒன்றை மூதுாா் பிரதேசத்தில் ஸ்தாபித்து இப்பிரதேச இளைஞர்கள், பாடசாலையை விட்டு விலகிய மாணவர்கள், தொழில் தேடிக் கொண்டிருப்போா், மாணவர்கள் போன்ற பல்வேறுமட்ட தரப்பினருக்கு கணனி கற்கையை வழங்கிவருகின்றோம்.
இந்த கற்கை நெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றிருப்பதானது எமது செயற்றிட்டத்தின் ஒரு மைலகல் எனலாம். பயிற்சி நெறியினை நிறைவுசெய்த மாணவர்கள் அடுத்த கட்ட தொழில் சாா் தகமையை தொடருவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்த வாய்ப்புகள் இப்பிரதேச இளையுர்களுக்கு தொடர்ந்தும் கிடைக்க வேண்டும் என்பதே எமது எதிர்பா்ப்பாகும்.
கிராமப்புரங்களில் டிஜிட்டல் கல்வியை மேம்படுத்துவதில் இரட்ணம் பவுன்டேஷன் மற்றும் வன்னி ஹோப் நிறுவனங்களின் சேவைகள் மகத்தானதாகும். இந்த மகத்தான சேவையில் சேனையுர் அனாமிக்கா பண்பாட்டு மையம் எங்களுடன் கைகோர்த்திருப்பதை நாங்கள் ஒரு பலமாகவே பாார்கின்றோம். பிரதேச இளைஞர்களின் தொழில் சாா் தகைமைகளை முன்னேற்றுவதில் பல்வேறுமட்ட நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயற்படுவது எமக்கு மகிழ்சியளிக்கின்றது. என தெரிவித்த அவர்
இந்த பணிக்காக உதவி வரும் இரட்ணம் பவுண்டேஷன் நிறுவனத்தின் ஸ்தாபகர் கலாநிதி நித்தியானந்தன், வன்னி ஹோப் நிறுவனத்தின் ஸ்தாபர் ரஞ்சன் சிவஞாணசுந்தரம் மற்றும் அனாமிக்கா பண்பாட்டு மையத்தின் ஸ்தாபகர் பேராசிரியர் பாலசுகுமாா் ஆகியோருக்கு நன்றியை இவ்விடத்தில் கூறிக்கொள்வதில் பெருமை கொள்கின்றேன். என குறிப்பிட்டார்.
இதன் போது வன்னி ஹோப் அவுஸ்திரேலியா நிறுவனத்தின் செயலாளரும் பணிப்பாளருமான வைத்தியர் மாலதி வரன், அனாமிகா பண்பாட்டு நிலையத்தின் உத்தியோகத்தர்கள், வன்னி ஹோப் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment