6 Sept 2023

ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி நிருவாக சபைக் கூட்டம்.

SHARE

ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி நிருவாக சபைக் கூட்டம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புத் தொகுதிக்கான நிருவாக சபைக் கூட்டம் திங்கட்கிழமை(05.09.203) மாலை குருக்கள்மடத்தில் அமைந்துள்ள கட்சியின் தொகுதிக் காரியாலயத்தில் இடம்பெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்பு தொகுதிக்குரிய அதிகாரமளிக்கப்பட்ட முகவர் சிவலிங்கம் சுதர்சனன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக்குரிய நிருவாக சபை உறுப்பினர்கள் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகளை பட்டிருப்புத் தொதியில் மேலும் எவ்வாறு முன்கொண்டு செல்வது, அபிவிருத்தி திட்டங்களை முன்னிறுத்தி திட்ட வரைபுகளை தலைமைக் காரியாலயத்திற்கு அனுப்புதல், எதிர்வரும் காலத்தில் எந்த தேர்தலாக இருந்தாலும் அதனை எவ்வாறு எதிர்கொள்வது, போன்ற பல விடையங்கள் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டன.

தம்மால் முன்மொழியப்படும்  வீதிபுனரமைப்பு, பாடசாலைகளின் தேவைகள், சுகாதாரத் தேவைகள், உள்ளிட்ட பல விடையங்களுக்கு முன்னுரிமை வழங்கி அவற்றை விரைவாக நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இதன்போது கலந்து கொண்டிருந்த உறுப்பினர்கள் கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக்குரிய அதிகாரமளிக்கப்பட்ட முகவர் சிவலிங்கம் சுதர்சனனிடம் எடுத்துரைத்தனர். இதன்போது 10 பேருக்கு சமாதான நீதவான்களுக்குரிய விண்ணப்ப படிவங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தனித் தமிழ் மக்களை மாத்திரம் கொண்டமைந்த பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் மண்முனை தென் எருவில் பற்று, போரதீவுப் பற்று. மற்றும் மண்முனை தென்மேற்கு, ஆகிய மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளையும், ஒரு இலெட்சத்திற்கு மேற்பட்ட வாக்களர்களைக் கொண்டமைந்த பெரும்பிரதேசமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.







SHARE

Author: verified_user

0 Comments: