1 Sept 2023

வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றுக் கொள்வதங்கு இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளது – அமைச்சர் பந்துல

SHARE

வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றுக் கொள்வதங்கு இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளதுஅமைச்சர் பந்துல.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் அரசாங்கம் வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றுக் கொள்வதங்குரிய இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளது. அந்த செயற்றிட்டம் நிறைவடைந்தால் அடுத்த ஆண்டு இந்த பட்டிருப்பு பாலத்தை அமைப்பதற்கு நான் முன்னுரிமை வழங்குவேன். அதபோன்று மாணவர்கள் கோரிக்கை விடுக்கின்ற வீதியை அடுத்த வருடம் செப்பனிட்டுத் தருவேன். வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு புத்தகத்திலே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. புத்தகத்திலே இருந்தாலும் கையிலே இல்லாமல் உள்ளது. அவ்வாறான அமைச்சர்கள்தான் இங்கு உள்ளார்கள்.

என ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துளளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வியாழக்கிழமை(31.08.2023) விஜயம் செய்திருந்த அவர் பல்வெறு அபிவிருத்தித்திட்ட பணிகளிலும் ஈடுபட்டிருந்தார். இதன்போது புரரமைக்கப்பட்ட களுவாஞ்சிகுடி கண்ணககை அம்மன் வீதியை திறந்து வைத்து வைத்து விட்டு கருத்துத் தெரிவிக்கையியே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதன்போது இராஜாங்க அமைச்சர்களான சிவனேசதுரை சந்திரகாந்தன், சிறிபால ஹம்லத், மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்.

கடந்த 30 வருடங்களாக ஏற்பட்டிருந்த யுத்த நிலமையை நான்கூறித்தான் மக்கள் அறிய வேண்டியதில்லை. இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கின் வசந்தம், கிழக்கின் உயதம், ஆகிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தோம். கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக புனரமைக்கப்படாமலிருந்த கிறவல் வீதிகள் அனைத்தும் கார்பட் வீதிகாக அமைக்கப்பட்டன. அதிகளவு பாலங்கள் கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டன.

நான் கல்வியமைச்சராக இரந்த காலத்தில் மாணவர்களின் நலன்களுக்காக பல்வெறு பாடவிதானங்களை மையப்படுத்தி தொழில்நுட்பக் கல்வியை அறிமுகப்படுத்தியிருந்தேன். இந்த நாட்டிலே ஏனைய பிரதேசங்களில் அமைக்கப்பட்டது போன்று கிழக்கு மாகாணத்திலும் 100இற்கு மேற்பட்ட மஹிந்தோதய தொழில்நுட்ப விஞ்ஞானகூடங்களை அமைத்துக் கொடுத்தேன். வாழ்க்கையில் ஒரு நாளும் கணிணியைக் கையாளாத மாணவர்களுக்கு நான் கணிணிக் கல்வியை அறிமுகம் செய்து கொடுத்தேன். விவசாயம் உள்ளிட்ட பல முறைகளிலும் நான் பல துறைகளிலும் பல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டிருந்தேன்.

அழிந்திருந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு உலக வங்கியிலிருந்தும், ஆசிய அபிவிருத்தி வங்கியிலிருந்தும், ஏனைய உலக நிதி நிறுவனங்களிலிருந்தும், சகோதர நாடுகளிலிருந்தும், நாம் நிதியைப் கடனாகப் பெற்றிருந்தோம். இவ்வாறான நிதியை வைத்துக் கொண்டுதான் கிராம மட்டம் முதல் அபிவிருத்திகளை மெற்கொண்டிருந்தோம். நாம் பெற்ற நிதியை மீண்டும் முதலும், வட்டியுமாக செலுத்தி வந்தோம். கடனை முறையாகச் செலுத்தி வந்ததனால் ஏனைய நாடுகளும் எமக்கு கடன்களைத் தருவதற்கு முன்வந்தன.

கொவிட்-19 காரணமாக அனைத்து நாடுகளும் மிகவும் பலத்த சவால்களுக்கு முகம் கொடுத்திருந்தன. இதனால் எம்மைப் போன்ற சிறிய நாடுகள் பெரிய நாடுகளிலிருந்து கடன்களைப் பெறமுடியாமல் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது. தொடர்ந்தும் நாம் கடனை மீண்டும் மீளளிக்க முடியாது என்பதை உலகுக்குக் கூறியீருந்தோம். நாம் மிகவும் வங்குரோத்து நிலையை அடைந்தோம்.

துறைமுகதிற்கு வந்த கப்பலிலிருந்த எரிபொருள், மற்றும் எரிவாயு, போன்றவறை, பணம் செலுத்தி பெற்றுக் கொள்வதற்குரிய நிலமை எம்மிடம் இருக்கவில்லை. உமாஓயா திட்டத்தில் 98வீதமாக வேலைகள் நிறைவேறயிருந்தது மிகுதியாக அதனை நிறைவு செய்வதற்கு 200 மில்லியன் தேவைப்பட்டது அதற்குக்கூட நிதி கிடைக்கவில்லை. இதனால் மக்கள் மிகவும் துன்பமடைந்தார்கள், எரிபொருள், எரிவாயு, பெறுவதற்காக வரிசையில் நின்றபடியே சிலர் இறந்தார்கள். எனவே நூலிலிருந்து பிரிந்த பட்டம்போன்று அப்போது மக்களின் நிலைமை காணப்பட்டன. செலவீனங்ககள் அதிகரித்தன, வங்கி வட்டி வீதங்களும் 30 வீததால் அதிகரித்தன. இந்நிலையில் ஜே.வி.பி. போன்ற கட்சிகள் மக்களை குளப்பத்திற்கு உள்ளாக்கினார்கள்.

இதுபோன்று அரச பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரிக்கப்பட்டு அவர்களும் பல இன்னல்களைச் சந்தித்திருந்தார்கள். இந்நிலையில்தான் தற்போதைய அரசியல் நிலையில் இருக்கின்ற பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண முடியாது. பட்டிருப்பு பாலம் உண்மையில் புனரமைப்புச் செய்யப்படல் வேண்டும். அதற்கு 1500 இற்கும் அதிகமான மில்லியன் நிதி தேவைப்படுகின்றது. இதனை மேற்கொள்வதற்கு இந்த அரசாங்கத்தால் முயடியாதுள்ளது. எனினும் வெளிநாட்டுக் கடன்களைப் பெறவேண்டியுள்ளது.

தற்போதைய நிலையில் அரச உழியர்களுக்கம், ஓய்வூதியத்திற்கும்தான் நிதி வசதிகள் உள்ளன. அபிவிருத்தித்திட்டங்களுக்கு நிதி வசதிகள் போதாதுள்ளன. எனினும் சர்வதேச நாணைய நிதியத்திடமிருந்து கடன் வசதிகள் கிடைக்கப்பறெ;றதும் இப்பகுதியிலுள்ள கிராமிய வீதிகளை புனரமைப்புச் செய்வதற்கு ஒதுக்கீடுகளை மேற்கொள்வேன். முழு நாட்டிற்கும் ஒதுக்கீடு செய்கின்ற நிதியை கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் செலவீடு செய்தால் ஏனைய மாகாணங்களுக்கு எம்மால் செல்ல முடியாமல் போய்விடும்.

தமிழ், சிங்களம், முஸ்லிம், பேகர், என அனைவரும் இணைந்ததான் இந்த நாட்டிற்கு சுதத்திரத்தைப் 1948 ஆம்ஆண்டு பெற்றுக் கொடுத்தோம். எனவே தற்போது பொருளாதார விடுதலையைப் பெறுவதற்கு நாம் பாரியதொரு வேலைத்திட்டங்கைள மேற்கொள்ள வேண்டியதுள்ளது. நாங்கள் அனைவரும் ஜாதி, மத வேறுபாடுகளின்றி ஒன்றுபட்டு செயற்பட்டால் இந்த நாட்டிற்கு பொருளாதார வீழ்ச்சியிலிருந்து விடுபடமுடியும். எனவே இனைஒற்றுமையை விரும்பி செயற்படுகின்ற பிள்ளையான் அமைச்சரின் ஆர்வத்திற்கு நானும் ஜனாதிபதி அவர்களும் மெலும் ஒத்துழைப்பு வழங்கவுள்ளோம்எனவே அடுத்த ஆண்டு பிள்ளையான் அமைச்சருமன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் பல அபிவிரத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.


 








SHARE

Author: verified_user

0 Comments: