3 Sept 2023

சிறுவர்களின் பாதுகாப்புக்கு நாமே பொறுப்புடைய பிரஜைகளாவோம் யாத்திரீகர்கள் மத்தியில் - சமூக மட்டத்திலான கையெழுத்துப் பிரசாரம்.

SHARE

சிறுவர்களின் பாதுகாப்புக்கு நாமே பொறுப்புடைய பிரஜைகளாவோம் யாத்திரீகர்கள் மத்தியில் - சமூக மட்டத்திலான கையெழுத்துப் பிரசாரம்.

சிறுவர்களின் பாதுகாப்புக்கு நாமே பொறுப்புடைய பிரஜைகளாவோம்எனும் தொனிப் பொருளில் அமைந்த சமூக மட்டத்திலான உறுதியுரையுடன் கையெழுத்துப் பெறும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் சனிக்கிழமை (02.09.2023) வவுணதீவுப் பிரதேசத்தைக் கடந்து சென்ற யாத்திரீகர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பிலிருந்து ஆயித்தியமலை சதாசகாய மாதா  திருத்தலத்தின் இந்த ஆண்டிற்கான திருவிழா இறுதி நாள் யாத்திரை  சனிக்கிழமை 02.09.2023 இடம்பெற்றது. யாத்திரையின்போது பல ஆயிரக்கணக்கானோர் குடும்ப சகிதம் வவுணதீவு வழியாகவும்  பயணித்தனர்.

அவ்வாறு கால்நடையாக யாத்திரையில் பயணித்தோரிடம் மண்முனை மேற்கு இளைஞர் யுவதிகள் செயற்பாட்டாளர்களால்சிறுவர் பாதுகாப்புக்கு நாமே பொறுப்புடைய பிரஜைகளாவோம்எனும் விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு உறுதியுரைக் கையெழுத்தும் பெறப்பட்டது.

மேலும், “எமது பிரதேசத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு சிறுவர்களும் எமது நாட்டின் எதிர்கால சொத்து என்பதை நன்கு உணர்ந்துள்ளோம். அவர்களின் பாதுகாப்பு, கல்வி, சமூக மேம்பாடு என்பவற்றிற்கு நாமே நாட்டின் பொறுப்புடையவர்கள்.

எமது சமூகத்தில் வாழ்கின்ற, சிறுவர்கள்மீதான வன்முறைகளுக்கு எதிராகவும், அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதோடு எனது கையொப்பத்தினை இடுகின்றேன்என்ற உறுதியுரையுடன் கால்நடையாக யாத்திரை மேற்கொண்டிருந்தவர்களிடம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அவ்வேளையில், சுமார் 5000 பேர் கையெழுத்திட்டிருந்ததாக செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

சிறுவர் நிதியத்தின்  நிதி அனுசரணையுடன்  அக்ஷன் யுனிற்றி லங்கா தன்னார்வத் தொண்டு நிறுவனமும் வவுணதீவு பிரதேச செயலகமும் இந்த சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரத்திற்கு  ஆதரவு வழங்கியிருந்தன.

சிறுவர்களின் எதிர்காலம் பெற்றோர்களின் சீரான வழிநடத்தலில் தொடர்கிறது, மதுவை புறந்தள்ளி சிறுவர்






களைப் பராமரித்துப் பாதுகாப்;போம், வீடு பாடசாலை மற்றும் சூழலை சிறுவரி; நேய இடங்களாக மாற்றுவோம், சிறுவர்கள் மீது சரீர தண்டனைகளை இல்லாதொழிப்போம், சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுப்போம், சிறுவர்கள் முன் மனிதர்களாவோம், யாத்திரையின்போது பொலித்தீன் மற்றும்; பிளாஸ்ரிக் பொருட்களை அகற்றி இயற்கையை அழகுபடுத்தி இறைவனை நேசிப்போம்எனும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் இளைஞர் செயற்பாட்டார்கள் யாத்திரை சென்றோர் முன்பாக காட்சிப்படுத்தி வைத்திருந்தனர்.

இந்நிகழ்வின்போது வவுணதீப் பிரதேச செயலாளர் எஸ். சுதாகர், உதவிப் பிரதேச செயலாளர் சுபா சதாகரன்அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் வி. சுதர்ஷன், நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் அனுலா அன்ரன் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.


SHARE

Author: verified_user

0 Comments: