ஜனாதிபதியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே திட்டமிட்ட இன முரண்பாட்டு சதிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது - பிரபாகரன்.
தற்போதைய ஜனாதிபதியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே திட்டமிட்ட இன முரண்பாட்டு சதிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் இ.பிரபாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் வெள்ளிக்கிழமை(25.08.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…..கிழக்கு மாகாணத்தில் தற்போது முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட காணி அபகரிப்பானது ஒரு அரசியல் சதி மட்டக்களப்பு மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்திலும் தமிழர்களது பூர்வீக காணிகள் தற்போது ஜனாதிபதியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காகவே திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற ஒரு சதியாகும். இதனை எமது கட்சி வன்மையாக கண்டிக்கின்றது.
சமயத் தலைவர்களது செயற்பாடுகள் அரசாங்கத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொடுக்கும். கிழக்கு மாகாண ஆளுநர் நடுநிலைமையாக செயல்படுவது வரவேற்கத்தக்கது யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காணி மீளவும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இதனை பிழையாக வழிநடத்துகின்றார். ஜனாதிபதியையோ அமைச்சர்களோ, இதற்கு உடன்பாடில்லை இதற்கு அரச அதிகாரிகளின் பிழையான செயற்பாடுகளே ஆகும்.
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டை சுற்றி பேரினவாதிகள் முற்றுகை இடுவதை நாம் வன்மையாக கண்டிக்கின்றேன். சுகாதார செயற்பாடுகள் தற்போது மட்டக்களப்பு போதனை வைத்திய சாலையில் மந்தகதியில் முன்னெடுக்கப்படுகின்றது. இவ்விடயத்தில் அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டும் என அவர் மேலும் கருத்து தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment