எதிர்வரும் பெரும் போகத்தில் எதிர்நோக்கவுள்ள சவால்களுக்கு தீர்வு காணும் பொருட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிற்சி.
கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளரின் அனுசரணையுடனும், மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளரின் வளிகாட்டுதலுடனும் எதிர்வரும் பெரும் போகத்தில் நெற்செய்கை விவசாயிகள் எதிர்நோக்கும் சவால்களுக்கு தீர்வு காணும் பொருட்டு போக முன் பயிற்சி வகுப்பு Pre seasonal training class உடயளள பழுகாமம் பிரிவிற்குரிய நெற்செய்கை விவசாயிகளை ஒருங்கிணைத்து பழுகாமம் விவசாயப் போதனாசிரியர் அலுவலகத்திறில் பயிற்சி வகுப்பு வியாக்கிழமை(24.08.2023) நடாத்தப்பட்டது.
இந்த பயிற்சி வகுப்பில் மட்டக்களப்பு தெற்கு வலய உதவிவிவசாய பணிப்பாளர் எஸ்.சித்திரவேல்., மாகாண விவசாய திணைக்கள தொழில் நுட்ப உத்தியோகாஸ்தர் நியாஸ், விவசாய போதானசிரியர் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டு விவசாயிகளுக்குரி ஆலோசனைகளையும், விளக்கங்களையும் வழங்கி வைத்தனர்.
இதன்போது கலந்து கொண்ட விவசாயிகளுக்கு எதிர்வரும் பெரும் போகத்தில் நெற்செய்கை விவசாயிகள் எதிர்நோக்கவுள்ள சவால்கள் பலவற்றிற்கு அதிகாரிகள் உகந்த ஆலோசனைகளயும், விளக்கங்களையும் வழங்கினர்.
0 Comments:
Post a Comment