14 Jul 2023

சாணக்கியன் யார் என தெரியுமா விபரிக்கும் இராஜாங்க அமைச்சர்.

SHARE

சாணக்கியன் யார் என தெரியுமா விபரிக்கும் இராஜாங்க அமைச்சர்.

சாணக்கியன் அரசாங்கத்துடன் இணைந்து அரசியலுக்கு வந்தவர், அவரை தமிழ் தேசிய வாதியென்று நம்புபவர்கள் எதிர்காலத்தில் சிந்தித்து முடிவுகளை எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

உலக வங்கியின் நிதி உதவியில் நீர்ப்பாசன அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்டும் காலநிலை மாற்றத்தை எதிர்நோக்குவதற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி அணுகுமுறை வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டம் கற்சேனைக் கிராமத்தில் விநாயகர் அணைக்கட்டுக்குரிய மீழ் நிருமாண ஆரம்ப நிகழ்வு வியாழக்கிழமை(13.07.2023) நடைபெற்றது.

இதன்போது கலந்து கொண்டு அணைக்கட்டு வேலைகளுக்கு அடிக்கல் நட்டு வைத்துவிட்டு கருத்துத் தெரிவக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எங்களை தொடர்ந்தும் இழிவுபடுத்தும் செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகின்றனர்.

அதிலும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அதிகளவான விமர்சனங்களை முன்னெடுத்து வருகின்றார். அவர் அரசாங்கத்துடன் இணைந்து அரசியலுக்கு வந்தவர்.

கவலையான விடயம் என்னவெனில் அவருடைய தாய் இனத்தவருடன் இணைந்து எங்களது வீடுகளையும் அவர் எரிக்க வந்தார். கிழக்கு பல்கலைக் கழகத்திலுள்ள சகோதர இன மாணவர்களுடன் இணைந்து எங்களது காரியாலயத்தினையும் எரிக்க முனைந்தார்.

அரசாங்கம் மாறவேண்டும், நாட்டில் மாற்றம் வேண்டும் என்று போராடியபோது சாணக்கியன் மாத்திரம் அவரது அரசியல் எதிரிகளான வியாழேந்திரன், பிள்ளையான் ஆகியோரின் வீடுகளையும் எரிக்க வேண்டும் என்றும் ஆக்களை கொண்டு வந்து கல்லெறிந்தார்.

இதுதானா ஜனநாயகம் என்பதை அவர்கள் கேட்டுப்பார்க்க வேண்டும். சாணக்கியனும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் இருந்திருக்காவிட்டால் எமது வீட்டுக்கு கல் வந்திருக்காது.

இவரை அரசியலுக்கு இழுத்து வந்தவர்கள், இவரை தமிழ் தேசியவாதியென்று நம்புபவர்கள் சிந்தித்து எதிர்காலத்தில் முடிவுகளை எடுக்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.






















 

SHARE

Author: verified_user

0 Comments: