அரசாங்கம் எடுத்த பகீரதப் பிரயத்தனத்தால் இந்த நாடு பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மேல்நோக்கி வருகிறது - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்.
உலக வங்கியின் நிதி உதவியில் நீர்ப்பாசன அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்டும் காலநிலை மாற்றத்தை எதிர்நோக்குவதற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி அணுகுமுறை வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டம் கற்சேனைக் கிராமத்தில் விநாயகர் அணைக்கட்டுக்குரிய மீழ் நிருமாண ஆரம்ப நிகழ்வு வியாழக்கிழமை(13.07.2023) நடைபெற்றது.
இதன்போது கலந்து கொண்டு அணைக்கட்டு வேலைகளுக்கு அடிக்கல் நட்டு வைத்துவிட்டு கருத்துத் தெரிவக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
அரசாங்கம் எடுத்த பகீரதப் பிரயத்தனத்தால் இந்த நாடு பொருளாதார வீழ்ச்சியிலிருந்து படிப்படையடிக மேல் நோக்கி வந்து கொண்டிருக்கின்றது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் காலத்திற்குப் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 பேர் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டு அதில் 2 பேர் அமைச்சர்களாகவுள்ளோம். இந்நிலையில் நாம் பல அபிவிருத்திகளைச் செய்து வந்தோம் இந்நிலையில் அவை அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுவிட்டன. ஆனாலும் அரசின் முயற்சியினால் அவ்வாறு இடைநிறுத்தப்பட்ட வீதி புனரமைப்பு, அணைக்கட்டு வேலைகள், வீடமைப்புக்கள், என பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் மெல்ல மெல்ல மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவற்றுக்காக வேண்டி நாம் பல அமைச்சுக்களுடனும், பிரமதர், ஜனாதிபதி உள்ளிட்டோரிடமும் பல பேச்சுக்களை முன்னெடுத்து வருகின்றோம். இருளை அகற்றி ஒளியைக் கொடுப்பதற்காகத்தான் இந்த நாட்டிலே ஆட்கள் தேவையாகவுள்ளது. என அவர் இதன்போது தெரிவித்தார்.
இதன்போது கிராமிய வீதி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந், பெரியியலாளர்கள், விவசாயிகள் என ஏராளமானோர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment