வன்னி ஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் பழுகாமத்தில் நடைபெற்ற நடமாடும் சேவை.
கிழக்கு மாகாண ஆளுநரின் பரிந்துரைக்கு அமைய சமூக சேவை திணைக்களத்தினால் போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி அவர்களின் வழிநடத்தலின் கீழ் வன்னி ஹோப் அவுஸ்ரேலியாநிறுவனத்தின் அனுசரணையில் பழுகாமம் கலாசார மண்டபத்தில் அப்பகுதி மக்களின் நன்மை கருதி நடமாடும் ஒன்று செவ்வாய்கிழை(04.07.2023) நடைபெற்றது.
இதன்போது காணி பயன்பாடு, சமூகசேவை, நோய்கொடுப்பனவு, விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவு,70 வயதைப் பூர்த்தி செய்தோருக்கான கொடுப்பனவு, மருத்துவ முகாம், சுதேச வைத்திய சேவை, மூக்கு கண்ணாடி வழங்கல், உள்ளிட்ட பல சேவைகளை அப்பகுதி மக்கள் தமது காலடியிலேயே பெற்றுக் கொண்டதுடன், மக்களின் பல அரச தேவைகளுக்கான தீர்வுகளும் அவ்விடத்திலேயே பெற்றுக் கொடுக்கப்பட்டன.
இதில் போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி, வெல்லாவெளி பிரதே சுகாதார வைத்திய அதிகாரி, பிரதேச செயலக உயர் அதிகாரிகள், உத்தியோகஸ்த்தர்கள், வைத்தியர்கள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இச்சேவை மூலம் அப்பகுதியிலுள், பழுகாமம் - 01, பழுகாமம் 02, விபுலானந்த புரம், மாவேற்குடா, வீரஞ்சேனை, வன்னி நகர் மற்றும் பெரியபோரதீவு, பட்டாபுரம், உள்ளிட்ட பல கிராம சேவையாளர்களைச் சேர்ந்த 500 இற்கு மேற்பட்ட மக்கள் நன்மையடைந்தனர்.
0 Comments:
Post a Comment