4 Jul 2023

கமநல அமைப்புகளின் வேண்டுகோளுக்கிணங்க இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் பணிப்புரையின்பேரில் மட்டக்களப்பு முகத்துவாரம் அகலும் பணி ஆரம்பம்.

SHARE

கமநல அமைப்புகளின் வேண்டுகோளுக்கிணங்க இராஜாங்க அமைச்சர்  சி.சந்திரகாந்தன்  பணிப்புரையின்பேரில் மட்டக்களப்பு முகத்துவாரம் அகலும் பணி ஆரம்பம்.

மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் அமையப்பெற்ற கவுடாதீவு, மகளுர், குறுமன்வெளி போன்ற கிராமங்களிலுள்ள வயல்வெளிகளில் காட்டு வெள்ளம் உட்புகுந்ததன் காரணமாக அறுவடைக்கு தயாரான ஆயிரக் கணக்கான வயல் நிலங்கள் அழியும் தறுவாயில்  காணப்படுகின்றது.

இந்நிலையில் அக்கிராம மக்களும், கமநல அமைப்புக்களும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான  சி.சந்திரகாந்தன் அவர்களிடம், கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

அதற்கமைவாக, விரைந்து செயற்பட்ட இராஜாங்க அமைச்சர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விடுத்த பணிப்புரையின்பேரில்  திங்கட்கிழமை(03.07.2023) மட்டக்களப்பு முகத்துவாரம் அகலும் பணியை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான களவிஜயத்தினை  முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் இணைப்பு செயலாளருமான பூ.பிரசாந்தன் அவர்கள் மேற்கொண்டிருந்தார்

மேற்படி முகத்துவாரம் அகலும் பட்சத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் பாதுகாக்கப்படுவதுடன் குறித்த முகத்துவாரத்தினூடாக இயந்திரபடகு மூலம் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களும் இலகுவாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் எனவும் விவசாயிகளும், அப்பகுதி மீனவர்களும் தெரிவிக்கின்றனர். இதன்போது துறைசார் அதிகாரிகள், மீனவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து முகத்துவாரம் அகலும் பணியில் கலந்து கொண்டிருந்தனர்.















 

SHARE

Author: verified_user

0 Comments: