கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு கொத்துகுளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆடிப்பூர பாற்குட பவனி.
இந்து மக்களின் வழிபாடுகளில் ஆடி மாதம் மிகவும் சிறப்பு பெற்றதாகும். கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு கொத்துகுளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சிறப்புமிக்க வழிபாடுகளில் ஒன்றான ஆடிப்பூர பால்குட பவனி சனிக்கிழமை(22.07.2023) சிறப்பான முறையில் இடம்பெற்றது.
ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சிவச்சந்திரன் தலைமையில் பாற்குட பவனியும், பூஜை வழிபாடுகளும், இடம்பெற்றன.
மட்டக்களப்பு புளியந்தீவு ஸ்ரீ ஆனைப்பந்தி சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து பாற்குடம் எடுக்கும் அடியார்கள் ஆலயத்தின் பிரதம குருவிடமிருந்து சங்கற்பம் செய்து தெற்பையினை பெற்றுக்கொண்டுடனர். பின்னர் அம்மனுக்குரிய பாலைப் பெற்றுக் கொண்டதன் பின்பு விசேட வழிபாடுகளைத் தொடர்ந்து, ஆடிப்பூர பாற்குடப்பவனி ஆரம்பமானது. பக்தர்கள் மட்டு நகரின் பிரதான வீதிகளுடாகச் சென்று கொத்துக்குளம் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் கருவறையில் வீற்றிருக்கும் முத்துமாரி அம்மனுக்கு பாலாபிஷேகம் இடம்பெற்றது. இந்த பால்குட பவனியில் இந்துக்களின் கலாச்சார மரபுகளை எடுத்துரைக்கும் வகையில். சிறுவர்களினால் நடன, நாட்டிய நிகழ்வுகளும் அலங்கரித்தன.
ஆலயத்தின் விசேட வழிபாடுகளின் பின் ஆடிப்பூர பால்குடப்பவனி நிறைவு பெற்றது. இதன் போது கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் இதில் பங்கு பற்றியமை இங்கு விசேட அம்சமாகும்.
இந்நிலையில் இதுபோன்று கிழக்கு மாகாணத்தில் பல அம்மன் ஆலயங்களிலும் இவ்வாறு சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment