21 Jul 2023

திறக்கப்படவுள்ள மதுபானசலைக்கு எனக்கும் எதுவித தொடர்பும் இல்லை - இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் செயலாளர் - தேவராஜன்.

SHARE

திறக்கப்படவுள்ள மதுபானசலைக்கு எனக்கும் எதுவித தொடர்பும் இல்லை - இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் செயலாளர் - தேவராஜன்.

இராஜாங்க அமைச்சர் அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை மக்களிடம் வெற்றிகரமாக முன்கொண்டு செல்வதை பொறுக்க முடியாமல் தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வேண்டுமென்றே பொய்யான கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்.

என இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் செயலாளரும், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொருளாளருமான ஆறுமுகம் தேவராஜன் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை(21.07.202) மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதிவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா பகுதியில் புதிதாக திறக்கப்பட உள்ள மதுபானசாலைக்கு தனது பெயரை தொடர்புபடுத்தி ஊடகங்களில் தெரிவித்து தனது புகைப்படத்தை சமூக ஊடகங்களில் மக்கள் மத்தியில் வேண்டுமென்றே ஒரு அரசாங்க அதிகாரிக்கு வேண்டுமென்றே கழங்கத்தை விளைவிக்க முயற்சி செய்துள்ளார்.

அவருக்குரிய சிறப்புரிமை பாவித்து எனது அடிப்படை உரிமையை மீறி கருத்துக்கள் தெரிவித்துள்ளமையானது, சமூக செயல்களில் ஈடுபட்டு வரும் எனக்கு இவரது கருத்துக்கள் ஆனது மிகவும் வேதனை அளிப்பதுடன், நான் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகப் பிரிவில் தகவல் அறியும் சட்டமூலத்தின் மூலம் இதனை உறுதிப்படுத்தி உள்ளேன். இதனை உறுதிப்படுத்தாது அவர் பொது வெழியில் தெரிவித்துள்ள உண்மையானது. வேண்டுமென்றே எமது இராஜாங்க அமைச்சரையும் களங்கப்படுத்துவதற்காகவே தன்னுடைய அரசியல் வாங்குரோத்து நிலைமை மறைப்பதற்காக வேண்டுமென்று இவ்வாறான பொய்யான கருத்துக்களை பாராளுமன்ற உறுப்பர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நான் தமிழரசு கட்சிக்காரர்களை மிகவும் மரியாதையுடன் அணுகுபவன். மாவட்டத்தில் புதிதாக வரும் மதுபானசாலைகள் திறப்பதை தடுக்கவேண்டும் அது மிகவும் சிறந்த விடயம். புதிய மதுபான சாலையை யார் திறக்க அனுமதி கோரி உள்ளார் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும் அதனை மறைப்பதற்காகவே  சமூகத்தை பாதிக்கும் இவ்வாறான செயல்களில் என்னை சம்பந்தப் படுத்தி இருப்பது மிகவும் வேதனையான விடயம். ஆவர்களுடைய அரசியலில் வேற கருத்துக்கள் இல்லையென்றால் இராஜாங்க அமைச்சர் மக்களுக்கு செய்கின்ற நற்காரியங்களை பொறுத்துக் கொள்ளாமல் வேண்டுமென்றே இவ்வாறான இழிவான வேலையை முன்னெடுக்கின்றார்கள். இதனை தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள்.

தேர்தல் காலங்களில் மக்கள் உங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மனதில் வைத்து அவர்களுக்காக செயல்படுங்கள். ஒரு அரசாங்க அதிகாரியினால் மதுபானசாலை திறப்பதற்கான அனுமதி பெறமுடியாது என்ற அடிப்படை அறிவுகூட தெரியாமல் பொதுவெழியில் இவ்வாறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம். அங்கு அனுமதி கோரி இருப்பவர். திழரசுக் கட்சியின் ஆதரவாளராக இருக்கலாம். இந்த மதுபானசாலை அனுமதிக்கும் எனக்கும் எதிர்வித தொடர்பும் இல்லை என அவர் இதன்போது தெரிவித்தார்.



 

SHARE

Author: verified_user

0 Comments: