9 Jun 2023

புதுமண்டபத்தடி - நடராசானந்தபுரம் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் எண்ணைக் காப்பு சாத்தும் நிகழ்வு.

SHARE

புதுமண்டபத்தடி - நடராசானந்தபுரம்  அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் எண்ணைக் காப்பு சாத்தும் நிகழ்வு.

மட்டக்களப்பு  மேற்கே அமைந்துள்ள புதுமண்டபத்தடி - நடராசானந்தபுரம்  அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்டபஷ பிரதிஷ்டா பஹா கும்பாபிஷேகப் பெருவிழா வெள்ளிக்கிழமை (09.06.2023) இடம் பெற்றது.

இதையிட்டு ஸ்ரீ சித்தி விநாயகருக்கும் ஏனைய பரிபால மூர்த்திகளுக்கும் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு வியாழக்கிழமை வியாழக்கிழமை (08.06.2023) இடம் பெற்றது.

சபரிமலை குருமுதல்வரும் சர்வதேச இந்துமத குருபீடாதிபதியுமான கலாநிதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார்  தலைமையிலான குருக்களால் வினாயகர் வழியாட்டுடன் யாகசாந்தி கிரியை இடம் பெற்றது.

புண்ணியாக வாசனம், ஆசாரிய சாந்தி, பூதசுத்தி, யாக பூசை, திருமுறை பாராயணம், விபூதிப் பிரசாதம் வழங்கல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றதையடுத்து எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

 

























SHARE

Author: verified_user

0 Comments: