கலாநிதி பட்டம் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் செயலாளருக்குப் பாராட்டு.
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் செயலாளரும், பாடசாலை அதிபருமான கிரான்குளம் கிராமத்தைச் சேர்ந்த சாமித்தம்பி மதிசுதன் அவர்களுக்கு அண்மையில் அமெரிக்க உலக தமிழ் பல்கலைக் கழகத்தால் கல்வி முகாமைத்துவத்துக்காக “கலாநிதி பட்டம்” வழங்கப்பட்டிருந்தது.
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தில் மிக நீண்ட காலமாகவிருந்து தொண்டர் சேவை செய்துவரும் கிளையின் செயலாளரான சாமித்தம்பி மதிசுதன் அவர்கள் இக்கலாநிதி பட்டம் பெற்றமைக்காக இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையால் வியாழக்கிழமை(08.06.2023) பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவர் த.வசந்தராசா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிளை நிளைநிவேற்று உத்தியோகஸ்த்தர் திருமதி.பி.வேணுஷா, மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், சுகாதாரக் குழு உறுப்பினர்கள், முதலுதவிப் போதனாசிரியர்கள், சிரேஸ்ட தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது காநிதிப் பட்டம் பெற்ற செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் செயலாளரும், பாடசாலை அதிபருமான சாமித்தம்பி மதிசுதன் அவர்கள் கல்விக்காகவும், சமூகத்திற்காகவும், மேற்கொண்டுவரும் பணிகள் தொடர்பில் இதன்போது கலந்து கொண்டிருந்தவர்கள் உரையாற்றியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment