நாமே நமக்கு செயற்றிட்டத்தின் மூலம் நன்மையடையும் அதிகளவு மக்கள்.
தற்போது வடக்கு கிழக்கு மாத்திரமின்றி மலையகத்திற்கும் விஸ்த்தரிக்கப்பட்டுள்ள இச்சேவையின் மூலம் மக்கள் அதிகளவு நன்மையடைந்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
நாம் ஒவ்வொருவரும் நாமாகவே சிந்தித்து தத்தமது குடும்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் முயற்சிகளை முன்னெடுக்கும் போதுதான் ஏனையோரும் மேலதிக உந்து சக்திகளை வழங்குவாழ்கள் என்பதற்கிணங்க புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் மக்கள் தாம் பிறந்து வளர்ந்த தாய்நாட்டிலுள்ள தமது உறவுகளுக்கு ஏதாவது ஓர் வகையிலாவது உதவ வேண்டும் எனும் எண்ணக்கருவிற்கிணங்க “நாமே நமக்கு” என்ற அமைப்பினூடாக “ வடக்கு கிழக்கு மற்றும் மலைய மக்களின் தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தல் ஊடாக தன்னிறைவான சமூதாயத்தை உருவாக்குவோம்” எனும் தொணிப் பொருளின் கீழ் பின்தங்கிய கிராமங்களில் வாழ்ந்து வரும் நலிவுற்ற மக்களை இனம் கண்டு அவர்களுக்கு வீட்டுத் தோட்டத்திற்குத் தேவையான மிளகாய், கத்தரி, உள்ளிட்ட பயிர் கன்றுகளையும், பயற்றை, கீரை, வெண்டி, புடோல், பாகல், அவரை, உள்ளிட்ட பயிர் விதைகளையும் வழங்கி வருகின்றனர்.
இதனை மக்கள் ஆர்வத்துடன் பெற்று அவற்றை தத்தமது வீடுகளில் சிறு தோட்டங்களாகப் பராமரித்து தமது வீட்டுத் தேவைக்குக் கிடைப்பதை எடுத்து விட்டு மேலதிகமானவற்றை விற்று அதிலிருந்து வருமானங்களையும் பெற்றுக் கொண்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
கடல் கடந்த தேசத்தில் இருந்தாலும் தம்மிடம் இதுவரையில் தங்களது முகங்களைக் காணாமல் எங்கேயோ இருந்து கொண்டு தமக்கு இவ்வாறான உதவிகளை மேற்கொண்டு வரும் புலம்பெயர் மக்களுக்கு தாம் சிரம் தாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளவதாக பயனாளர்கள் தெரிவிக்கின்றர்.
இந்நிலையில் “நாமே நமக்கு” செயற்றிட்டத்தின் மூலம் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பல ஆயிரக் கணக்கான மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் நன்மையடைந்து வருவதாக அவ்வமைப்பின் இணைப்பாளர்கள் தெரிவிக்கின்றர்.
0 Comments:
Post a Comment