9 May 2023

ஹாலியல பழமைவாய்ந்த முருகன் ஆலயத்தின் புனர்நிருமாணப் பணிக்கு உதவி வழங்கி வைப்பு.

SHARE

ஹாலியல பழமைவாய்ந்த முருகன் ஆலயத்தின் புனர்நிருமாணப் பணிக்கு உதவி வழங்கி வைப்பு.

லண்டன் வோள்தம் ஸ்ரோம் கற்பக விநாயகர் ஆலயத்தின் முழு அனுசணையில் பதுளை மாவட்டத்தின் ஹாலியல றொசட் இரண்டாம் பிரிவுத் தோட்டத்தில் அமைந்துள்ள மிகுந்த பழமைவாய்ந்த முருகன் ஆலயத்தின் புனர் நிருமாணப் பணிக்கு வெள்ளிக்கிழமை(05.05.2023) உதவி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வுதவி அகிலன் பவுண்டேசன் அமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது. இதனை  லண்டன் வோள்தம் ஸ்ரோம் கற்பக விநாயகர் ஆலயத்தின் அறங்காவலர் சபைத தலைவரும் அகிலன் பவுண்டேசன் அமைப்பின் ஸ்தாபகருமான மு.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நேரில் சென்று ஹாலியல றொசட் இரண்டாம் பிரிவுத் தோட்டத்தில் அமைந்துள்ள மிகு பழமைவாய்ந்த முருகன் ஆலயத்தின் நிருவாக சபையினரிடம், வழங்கியுள்ளார்.

இந்த பழமைவாய்ந்த முருகன் ஆலயத்தின் புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் செய்யும் வரையிலான முழுப் பொறுப்பையயும் தாம் ஏற்றுக் கொள்வதாக இதன்போது லண்டன் வோள்தம் ஸ்ரோம் கற்பக விநாயகர் ஆலயத்தின் அறங்காவலர் சபைத தலைவரும் அகிலன் பவுண்டேசன் அமைப்பின் ஸ்தாககருமான மு.கோபாலகிருஷ்ணன் இதன்போது தெரிவித்தார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ், )அகிலன் பவுண்டேசன் அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் வி.ஆர்.மகேந்திரன், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.















SHARE

Author: verified_user

0 Comments: