9 May 2023

வித்தகபுரத்தில் கல்விக்கு கரம் கொடுக்கும் அகிலன் பவுண்டேசன்.

SHARE

வித்தகபுரத்தில் கல்விக்கு கரம் கொடுக்கும் அகிலன் பவுண்டேசன்.

வலி வடக்கு பிரதேசத்திற்குட்பட்ட வித்தகபுரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாலை நேரக் கற்பித்தல், மற்றும் அங்குள்ள அறநெறிப் பாடசாலைக்கும் முற்றுமுழுதான நிதி அனுசரணையை லண்டன் வோள்தம் ஸ்ரோம் கற்பக விநாயகர் ஆலயம் வழங்கி வருகின்றது. இதன் அங்குரார்பபண நிகழ்வு சனிக்கிழமை(06.05.2023) நடைபெற்றது.

இவ்வுதவி அகிலன் பவுண்டேசன் அமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது. இதனை  லண்டன் வோள்தம் ஸ்ரோம் கற்பக விநாயகர் ஆலயத்தின் அறங்காவலர் சபை தலைவரும் அகிலன் பவுண்டேசன் அமைப்பின் ஸ்தாபகருமான மு.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நேரில் சென்று ஆரம்பித்து வைத்தார்இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜாஅகிலன் பவுண்டேசன் அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர்,  வி.ஆர்.மகேந்திரன்,  அப்பகுதி பொதுமக்கள்என ஏராளமானோர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.










SHARE

Author: verified_user

0 Comments: