வரலாற்றில் முதல் தடவையாக ஆசிரியர்களுக்கிடையே நடாத்தப்பட்ட விளையாட்டுப்போட்டி.
வழக்கமாக பாடசாலை மட்டத்தில் இல்ல விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறுவது நடைமுறையாக அமைந்துள்ளது. இந்நிலையில் வரலாற்றில் முதன் முறையாக மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களிடையே விளையாட்டுப் போட்டியொன்று நடைபெற்றது.
பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்கு வலயக் கல்விப் பணிப்பாளராக புதிதாக பதவியேற்றுள்ள சி.சிறிதரன் அவர்களின் தூரநோக்கு சிந்தனையின் அடிப்படையில் அவ்வலயத்திலுள்ள அனைத்து அதிபர்கள், மற்றும் ஆசிரியர்களுக்கும், பல துறைசார் பயிற்சிகளை அவ்வப்போது வழங்கி வரும் இந்நிலையில் அதன் மற்றுமொரு அங்கமாக அதிபர்கள் ஆசிரியர்களிடையேயும் மாணவர்களுக்கிடையே நடாத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள் போன்று அதிபர் ஆசிரியர்களுக்குமிடையே விளையாட்டுப் போட்டி நிகழ்வொன்று புதன்கிழமை(12.04.2023) மாலை களுதாவளை மகாவித்தியாலயம் தேசியபாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
வலயக் கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி.எம்.கோபாரரெத்தினம், அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்ததுடன், மேலும், ஓய்வு பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் க.பாஸ்கரன், களுதாவளை ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி எஸ்.மயுரேஷேன், மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள மண்முனை தென் எருவில் பற்றுக் கோட்டம், மற்றும் போரதீவுப் பற்றுக் கோட்டம், ஆகியவற்றிலுள்ள ஆசிரியர்களிடையே வேண்ட் வாத்தியம், கிரிக்கட், காற்பந்து, கரப்பந்து, நூறுமீற்றர், நானூறு மீற்றர், மற்றும் பரதநாட்டியம், உள்ளிட்ட கலை நிகழ்வுகளும், நடந்தேறியதோடு, வெற்றிபெற்ற ஆசிரியர்களுக்கு பதக்கங்களும், வெற்றிக்கேடயங்களும், அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment