14 Feb 2023

தொழில் முயற்சிகளில் ஈடுபடுத்துவதற்கான் பயிற்சி .

SHARE

தொழில் முயற்சிகளில் ஈடுபடுத்துவதற்கான் பயிற்சி.

மூதுர் பிரதேச செயலகம் மற்றும் திருகோணமலைமக்கள் சேவை மன்றம் ஏற்பாட்டில் இளம் தொழில் முனைவோருக்கான அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் வலையமைப்பை தாபித்து தொழில் முயற்சிகளில் ஈடுபடுத்துவதற்கான் பயிற்சி  மூதுர் பிரதேச சபை கேட்போர்  கூடத்தில் இடம் பெற்றது

USAID நிறுவனத்தின் சமூக ஒத்திசைவு மற்றும் நல்லிணக்க செயற்றிட்டத்தின் கீழ் தொழில் முயற்சிகளுக்கு உதவி வழங்கிய இருபத்து மூன்று இளம் தொழில் முனைவோருக்கே மேற்படி பயிற்சி அமர்வு நடைபெற்றது.

அரச மற்றும் தனியார்துறை நிறுவனங்களின் சேவைகளை பெற்று கொடுக்கும் நோக்குடன் இளம் தொழில் முயற்சியாளர்ளை ஒன்றிணைத்து வலையமைப்பு  ஓன்று தாபிக்கப்பட்டது இதன் மூலம் குறித்த இளைஞர் யுவதிகள் தொழில் மேலாண்மை மற்றும் தொழில் சார் அபிவிருத்தி மேம்பாடடையும்  என எதிர்பார்க்க படுகிறது

இந்த பயிற்சி அமர்வில் பிரதம வளவாளராக  பிரகலாதன் அவர்களும் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பதவி நிலை உத்தியோகத்தர் A. S. F. சலாம். மூதுர் பிரதேச செயலக சிறிய மற்றும் நடுத்தர வியாபார அபிவிருத்தி பிரிவு உத்தியோககத்தர்களான Y.M. சுஜாத் மற்றும் A. L ஷாமிலா, மற்றும் மூதுர் பிரதேச செயலக விதாதா வள நிலைய உத்தியோககத்தர்M. F. சாரா ஆகியோர்  இலகு படுத்துனர்களாக கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.









SHARE

Author: verified_user

0 Comments: