கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி.
பாடசாலை அதிபர் எஸ்.மதிசுதன் தலைமயில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ்.குலேந்திரகுமார் கலந்து கொண்டதுடன், சிறப்பு அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் கே.ஹரிஹரராஜ், கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.தில்லைநாதன் மற்றும், அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், எனப் பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில்;, மாணவர்களின் அணிநடை, உடற்பயிற்சி கண்காட்சி, கோலூன்றிப் பாய்தல், மற்றும், சுவட்டு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
இந்த வருட இல்ல விளையாட்டுப் போட்டியில் குறிஞ்சி இல்லம் 549 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும், முல்லை இல்லம் 532 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும், மருதம் இல்லம 503 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன. இதன்போது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், வெற்றிக் கேடயங்களும், அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment