22 Feb 2023

பயிர்களை துவசம் செய்த காட்டுயானை.

SHARE

பயிர்களை துவசம் செய்த காட்டுயானை.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்திலுள்ள கரவெட்டி சமுர்த்தி வங்கி வளாகத்தில் அமைந்துள்ள தோட்டத்தினுள் நுளைந்த காட்டுயானை அங்கிருந்த பயிர்களை அழித்து துவசம் செய்துள்ளது.

சமுர்த்தி வங்கியின் வேலியை உடைத்துக்கொண்டு செவ்வாய்கிழமை (21.02.2023) அதிகாலை உள்நுளைந்த காட்டுயானை அங்கிருந்த மரவள்ளி, வற்றாளை, பயற்றை போன்ற பயிர்களை அழித்து சேதப்படுத்தியுள்ளதாக கரவெட்டி சமுர்த்தி வங்கி முகாமையாளர் பிரியதர்சினி அசோக்குமார் தெரிவித்தார்.

வங்கி காவலாளி மற்றும் வங்கி ஊழியர்களால் செய்கை பண்ணப்பட்ட விவசாயத் தோட்டமே இவ்வாறு காட்டுயானையினால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.




 

SHARE

Author: verified_user

0 Comments: