காக்காச்சிவட்டை விஷ்ணு மகாவித்தியாலயம் (தேசிய பாடசாலை)யின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி.
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட காக்காச்சிவட்டை விஷ்ணு மகாவித்தியாலயம் (தேசிய பாடசாலை)யின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி புதன்கிழமை(01.02.2023) மாலை இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் பி.சுகிதரன் தலைமையில் நடைபெற்ற இத்திறனாய்வுப் போட்டியில் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன், பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான திருமதி.ரி.ராஜசேகர், திருமதி.ஜே.பிரியதர்ஷன், கே.ஜீவானந்தராசா, உதவிக் கல்விப் பணிப்பாளர்களான ரி.இதயகுமார், என்.நேசகஜேந்திரன், ஏ.பார்தீபன், எஸ்.தயாளசீலன், எஸ்.சுரேஸ், கே.திருச்செல்வம், கோட்டக்கல்விப் பணிப்பாளல் ரி.அருள்சாரா, மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், கிராம பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள், மாணவரகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பாண் பாத்தியங்கள் முழங்க அதிதிகள் வரவேற்கப்பட்டனர் இதில் பாடசாலை மாணவர்கள், மற்றும், ஆசிரியர்கள், இளங்கோ இல்லம்(பச்சை), வள்ளுவர் இல்லம்(நீலம்), கம்பர் இல்லம்(சிவப்பு), என மூன்றாக பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற்றன. இறுதியில் 383 புள்ளிகளைப் பெற்று வள்ளுவர் இல்லம் முதலாம் இடத்தையும், 380 புள்ளிகளைப் பெற்று கம்பர் இல்லம் இரண்டாம் இடத்தையும், 377 புள்ளிகளைப் பெற்று இளங்கோ இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.
மாணவர்களின் அணிநடை மற்றும் உடற்பயிற்சி கண்காட்சி என்பன பார்வையாளர்களைக் கவர்ந்ததோடு, திறனாய்வுப் போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசில்களும். நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment