மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது.
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் ஞாயிற்றுக்கிழமை(11) கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
தலா ஒருவரிடமிருந்து 40 மில்லி கிறாம் ஐஸ் போதைப் பொருளை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிசார்
குறிப்பிட்டனர்.
சந்தேக நபர்கள் புதிய காத்தான்குடி மற்றும் டீன் வீதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிசார்
குறிப்பிட்டனர்.
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் ஆலோசனையில் காத்தான்குடி
பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரஹீம் தலைமையிலான பொலிசார் சந்தேக
நபர்களை கைது செய்துள்ளதுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து ஐஸ் போதைப்
பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் ஐஸ் போதைப் பொருளை பாவித்தும் விற்பணையும் செய்து வந்ததாகவும் விசாரணைகளில்
தெரிய வந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
தெரிய வந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருளையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில்
ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிசார்
மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்,
0 Comments:
Post a Comment