பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இறக்காமம் அரபா நகர் மக்களுக்கு உதவிகள் வழங்கிவைப்பு.
அடிப்படை வசதிகள் இல்லாத குடிவில் அரபா நகர் மக்களின் வாழ்வாதாரம், கல்வி வசதி, பொதுத் தேவைகள் என்பனவற்றில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து அவற்றினை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை பலரும் முன்னெடுத்து வருகின்றனர். அதன் ஒரு அங்கமாக கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களினால் இக்கிராமத்தில் வாழும் பாடசாலை கல்வியை தொடர்கின்ற அனைத்து மாணவர்களுக்குமான நிதி உதவி, பாலர் பாடசாலை ஆசிரியைக்கான கொடுப்பனவு, பொருளாதார நெருக்கடிக்குட்பட்டு வாழும் குடும்பங்களுக்குமான உலர் உணவுப் பொதிகள், சிறுவர்களுக்கான அன்பளிப்பு பொருட்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டன.இந் நிகழ்வில் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஷ்ஷான் விஷேட அதிதியாக கலந்து கொண்டதுடன் பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எம்.இம்டாட், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எச்.வஹாப், கிராம உத்தியோகத்தர் எம்.ஜே.எம்.அதீக், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் ஏ.எம்.எம். றியாஸ், ஓய்வுபெற்ற கிராம நிலதாரி முகம்மட் தம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment