மறைந்த தவிசாளர் யோகநாதன் அவர்களின் ஞாபகார்த்தமாக களுதாவளை பொது மயானத்தில் அஞ்லிபீடம் அமைக்க தீர்மானம்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் விசேட அமர்வு செய்வாய்கிழமை(06) களுதாவளையில் அமைந்துள்ள பிரதேச சபையில் இடம்பெற்றது. சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் அவர்கள் கடந்த முதலாம் திகதி உயிரிழந்தைதையடுத்து இவ் விசேட சபை அமைர்வு பிரதித் தவிசாளர் திருமதி.க.ரஞ்சினி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது உயிரிழந்த தமது சபையின் தவிசாளருக்கு உறுப்பினர்கள் சபையியில் அஞ்சலி செலுத்திய பின்னர் சபை அமர்வை மேற்கொண்டு சென்றனர்.
இந்நிலையில் இதுவரைகாலமும் எதுவித இடர்பாடுகளுமின்றி சபையை செவ்வனே தலைமை தாங்கி தவிசாளராகப் பதவி வகித்து உயிரிழந்த ஞா.யோகநாதன் அவர்களின் ஞாபகார்த்தமாக களுதாவளை பொது மயானத்தில் அஞ்லிபீடம் ஒன்றை பிரதேச சபையால் நிருமாணிக்க வேண்டும் என பிரதேச சபை உறுப்பினர் இ.வேணுராஜ் பிரேரணை ஒன்றை இதன்போது முன்வைத்தார். அதற்கு சபை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment